
சுமார் 13 மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் ஹாலிஎல, கல உட நூராணியா பாடசாலையில் விளையாட்டு மற்றும் கணித பாடங்கள் கற்பித்த ரமேஷ் ராமச்சந்திரன் என அறியப்படும் 44 வயது ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
15 - 16 வயது மாணவ மாணவியரே இவ்வாறு குறித்த நபரினால் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டுள்ள அதேவேளை கைதையடுத்து அவரை பணி நீக்கம் செய்திருப்பதாக ஊவா மாகாண கல்வி செயலாளர் அறிவித்துள்ளார்.
குறித்த நபரின் செயற்பாடுகள் தொடர்பில் முதற்கட்டமாக ஐந்து மாணவர்கள் முறையிட்டிருந்ததைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அதன் பின் 13 மாணவர்கள் இதுவரை முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment