இலங்கையில் மட்டும் ஏன் பெண் காதி நீதிபதிகள் கூடாது? பைசர் கேள்வி! - sonakar.com

Post Top Ad

Friday 16 August 2019

இலங்கையில் மட்டும் ஏன் பெண் காதி நீதிபதிகள் கூடாது? பைசர் கேள்வி!



தற்போது நடைமுறையிலுள்ள முஸ்லிம் விவாகஇ விவாகரத்து சட்டம் இந்நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு மிகப்பெரிய அநீதியாக இருப்பதாக தெரிவிக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா,  சட்டத்தரணிகளாக இருக்கும் முஸ்லிம் பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.



இன்று அவரது இல்லத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர், மலேசியா, டுனூசியா, இந்தோனேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகளில் குறிப்பாக பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறு இருக்கையில் சட்டத்தரணிகளாக இருக்கும் முஸ்லிம் பெண்கள் ஏன் எமது நாட்டில் காதி நீதிபதிகளாக வரக்கூடாது என்று கேள்வியெழுப்பினார்.

இலங்கையில் ஏனைய சமூகங்களினது விவாகரத்து சட்டம் மாவட்ட நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுவது போன்று முஸ்லிம் காதி நீதிமன்றங்களும் அதே தரத்திற்கு உயர்த்தப்படல் வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-அஸ்ரப் ஏ சமத்

No comments:

Post a Comment