ACJUவின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து! - sonakar.com

Post Top Ad

Monday 12 August 2019

ACJUவின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து!


அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்

தியாகத் திருநாள் ஈதுல் அழ்ஹாவை கொண்டாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் ஈதுல் அழ்ஹா வாழ்த்துக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துக் கொள்கிறது.


நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் குடும்பத்தின் தியாகத்தை பறைசாட்டுகின்ற பெருநாளகவே இத்தியாக திருநாள் அமைந்திருக்கின்றது. இந்த குடும்பத்தின் தியாகம் முழு மனித சமூகத்திற்கும் சிறந்த முன்மாதிரியாகும். அதனையே நாமும் இத்தினத்தினங்களில்  நினைவு படுத்துகின்றோம்.

'உங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்கு திடமாக இவர்களில் (இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடமும் அவரோடு இருந்தவர்களிடமும்) அழகிய முன்மாதிரியிருக்கிறது' – (60:06) என்ற அல் குர்ஆன் வசனத்தை நினைவில் நிறுத்தி தியாக சிந்தையோடும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும்.

பெருநாள் தினத்திலும் அதனைத் தொடர்ந்து வரும் மூன்று தினங்களிலும் நிறைவேற்றுகின்ற உழ்கிய்யாவுடைய அமல்களையும் நாம் இஸ்லாத்தின் போதனைகளுக்கு உட்பட்ட வகையிலும் நாட்டின் சட்ட திட்டங்களை பேணியும் ஒழுங்காக நிறைவேற்ற முன் வர வேண்டும். இது தொடர்பாக ஜம்இய்யா வழிகாட்டல் ஒன்றை வழங்கியிருக்கின்றது.

சர்வதேச மட்டத்தில் மாத்திரமின்றி தேசிய மட்டத்திலும் முஸ்லிம்களுக்கு எதிராக பல முயற்சிகள்  நடை பெற்று வருகின்றது. அவற்றை  முறியடிப்பதற்காக இச்சிறந்த தினங்களில் அனைவரும் அல்லாஹ்விடம் பிராத்திப்போமாக. 

அதே நேரம் நாம் எமது பெருநாளை அமைதியான முறையில் கொண்டாடுவோம். எல்லாம் வல்ல அல்லாஹ் உலகலாவிய ரீதியிலும், உள் நாட்டிலும்; சமாதானத்தையும் ஐக்கியத்தையும் உண்டாக்க வேண்டுமெனவும் உலகலாவிய முஸ்லிம்கள் பொதுவாகவும் இலங்கை முஸ்லிம்கள் குறிப்பாகவும் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க வேண்டும் என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கின்றது.

தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்!  ஈத் முபாரக்!

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments:

Post a Comment