சட்டமா அதிபர் அலுவலகத்தின் இழுத்தடிப்பினால் தப்பிய சஹ்ரான்: TID! - sonakar.com

Post Top Ad

Thursday, 25 July 2019

சட்டமா அதிபர் அலுவலகத்தின் இழுத்தடிப்பினால் தப்பிய சஹ்ரான்: TID!


தடை செய்யப்பட்டுள்ள தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானின் நடவடிக்கைகளை அவதானித்து வந்த நிலையில், குறித்த நபரைக் கைது செய்வதற்கான பிடியாணையைப் பெற தமது தரப்பினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி சட்டமா அதிபர் அலுவலகத்தின் இழுத்தடிப்பினால் கை கூடவில்லையென பயங்கரவாத தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.குறித்த பிரிவின் இன்ஸ்பெக்டர் ஆர்.கே. பத்திரன, நாடாளுமன்ற தெரிவுக்குழு முன் சாட்சியமளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21ம் திகதிக்கு முன்பதாகவே சஹ்ரானைக் கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பிடியாணை கோரிக்கையில் தவறு கண்ட சட்டமா அதிபர் அலுவலகம் அதனை இழுத்தடித்ததாகவும் உள் விவகாரங்களை சீர் செய்து முடிப்பதற்குள் தாக்குதல் நடந்து விட்டதாகவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சஹ்ரானினால் இயக்கப்பட்டு வந்த முகநூல் பக்கத்தை தடை செய்ய மேற்கொண்ட முயற்சியும் ஏப்ரல் 11 அளவிலேயே சாத்தியமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment