த.தே.கூ MPக்களுக்கு பிரதேச சபை + ஆளுக்கு 50 மில்லியன்: தயாசிறி - sonakar.com

Post Top Ad

Saturday, 13 July 2019

த.தே.கூ MPக்களுக்கு பிரதேச சபை + ஆளுக்கு 50 மில்லியன்: தயாசிறிஅரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்து வாக்களிப்பதற்கு கல்முனை வடக்கு பிரதேச சபையென தனியான பிரதேச சபை மற்றும் அபிவிருத்தி பணிகளுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 50 மில்லியன் ரூபா நிதி தருவதற்கு ரணில் விக்கிரமசிங்க இணங்கியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் தயாசிறி ஜயசேகர.ஜே.வி.பியினால் கொண்டுவரப்பட்டிருந்த குறிதத பிரேரணை வாக்கெடுப்பில் தோல்வி கண்டிருந்த போதிலும் திரைமறைவில் பேரம் பேசப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையிலேயே தயாசிறி இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, மஹிந்தவும் - சம்பந்தனும் சேர்ந்து தோற்கடித்து விட்டார்கள் என ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment