முஸ்லிம் சட்டத்தரணிகளை குறி வைத்து புதிய ISIS பிரச்சாரம் - sonakar.com

Post Top Ad

Monday, 29 July 2019

முஸ்லிம் சட்டத்தரணிகளை குறி வைத்து புதிய ISIS பிரச்சாரம்


இலங்கையில் ஐ.எஸ். அமைப்பு புதிய தலைமைத்துவத்தின் கீழ் இயங்கி வருவதாகவும் அதில் முஸ்லிம் சட்டத்தரணிகளும் அடங்குவதாகவும் புதிய பிரச்சாரம் ஒன்று சமூக வலைத்தளம் ஊடாக கடும்போக்காளர்களால் முடுக்கி விடப்பட்டுள்ளது.மத்திய மாகாணம் உட்பட சில இடங்களில் உள்ள சமூகம் அறிந்த தொழிலதிபர்களும் முஸ்லிம் சட்டத்தரணிகள் சிலரும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பிரச்சார நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

இதேவேளை, ஈஸ்டர் தாக்குதலையடுத்து இடம்பெற்ற தொடர் சோதனை மற்றும் சுற்றிவளைப்புகள் ஊடாக ஐ.எஸ் அமைப்பு இலங்கையில் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக பிரதமர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment