மாலிக் அசீசுக்கு எதிரான முறைப்பாடு CID யிடம் ஒப்படைப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday, 30 July 2019

மாலிக் அசீசுக்கு எதிரான முறைப்பாடு CID யிடம் ஒப்படைப்புஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் தொடர்பில் 2017ம் ஆண்டு ஜுன் மாதமே தகவல் கிடைத்திருந்த போதிலும் சட்டமா அதிபர் அலுவலகம் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென விசாரணையின் போது தகவல் வழங்கியிருந்த சட்டமா அதிபர் திணைக்களத்தின் மாலிக் அசீசுக்கு எதிராக சிங்ஹல ராவய முன் வைத்திருந்த முறைப்பாட்டை விசாரிக்கும் பொறுப்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் வழங்கப்பட்டுள்ளது.சட்டமா அதிபர் அலுவலகம் தமது கடமைகளில் அலட்சியமாகவும் பொறுப்பில்லாத முறையிலும் நடந்து கொண்டுள்ளதாக சிங்ஹல ராவய குற்றஞ்சாட்டியுள்ளது. இந்நிலையிலேயே திணைக்களத்தின் சட்டத்தரணி என்ற வகையில் மாலிக் அசீசுக்கு எதிராக முறையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment