மஞ்சள் கோட்டால் தோல்வியடைந்த மஹிந்த: பசில் விள்க்கம்! - sonakar.com

Post Top Ad

Saturday, 20 July 2019

மஞ்சள் கோட்டால் தோல்வியடைந்த மஹிந்த: பசில் விள்க்கம்!


கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைவதற்கு மஞ்சள் கடவையிலேயே பாதசாரிகள் வீதியைக் கடக்க வேண்டும் என்ற கட்டாய சட்டம் கொண்டுவரப்பட்டது தான் காரணம் என்கிறார் பசில் ராஜபக்ச.மஹிந்தவின் பிரச்சார நடவடிக்கைக்குப் பொறுப்பாகவிருந்த அவர், தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, இரவோடிரவாக அமெரிக்கா சென்றிருந்தார். எனினும், தற்போது, தான் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னணியில் பல பொது சேவை ஊழியர்கள் தமக்குக் கிடைக்கும் 15 நிமிடம இடைவேளையில் ஓடிச்சென்று தேநீர் குடிக்கவும் முடியாதளவு மஞ்சள் கடவை கட்டாயமாக்கப்பட்டதாகவும் அதனை மீறினால் சனி-ஞாயிறு பொலிசார் வகுப்பெடுத்து தொல்லை தந்ததாகவும் அந்த கோபத்திலேயே மஹிந்தவுக்கு வாக்களிக்கவில்லையென்று தெரிவித்ததாகவும் கூறுகிறார்.

இதேவேளை, இம்முறை தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு புதிய மொபைல் அப் ஒன்றையும் விரைவில் வெளியிடவுள்ளதாகவும் இலத்திரனியல் பிரச்சாரஙங்களை பெரமுன முன்னெடுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமையும் கோட்டாபே ராஜபக்ச களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment