ஹஜ்ஜுப் பெருநாள் 'வாரம்' முழுமையாக விடுமுறை கோரும் ஹலீம் - sonakar.com

Post Top Ad

Sunday 28 July 2019

ஹஜ்ஜுப் பெருநாள் 'வாரம்' முழுமையாக விடுமுறை கோரும் ஹலீம்


ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தினத்தை முன்னிட்டு அரசாங்கத்தினால் வழங்கப்படும் விடுமுறையைத் அவ்வாரம் முழுவதும் நீடிக்குமாறு கல்வி அமைச்சருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால்துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம். 


இது தொடர்பில் அமைச்சர் தரப்பு வழங்கியிருக்கும் விளக்கம்: 

ஓகஸ்ட் 12 ஆம் திகதி முஸ்லிம் மக்களுடைய விசேட ஹஜ்ஜுப் பெருநாள்  தினத்தை முன்னிட்டு அரசாங்கப் பாடசாலைகளுக்கு 13 ஆம் திகதி வரையிலும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மறு நாள் 14 திகதி போயா விடுமுறை தினத்தை  தொடர்ந்து மீண்டும் 15 மற்றும்  16 ஆம் திகதிகளில் வியாழன் , வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாட்களிலும் பாடசாலை நடவடிக்கை இடம்பெறவுள்ளது. 

பெருநாள் விடுமுறையுடன் குறித்த 15, 16 ஆம் திகதிகளில் தூர இடங்களில் உள்ள ஆசிரியர்கள் விடுமுறையைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவர். மேலும் மாணவர்களின் பாடசாலை வரவும் மிகவும் குறைந்து காணப்படுவததற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இதன் காரணமாக ஒகஸ்ட் 15, 16 ஆம் ஆகிய குறித்த இரு நாட்களையும் விடுமுறை தினமாக ஆக்கித் தருமாறு  தூர இடங்களிலுள்ள ஆசிரியர்களும் பெற்றோர்களும்  எம்மிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எனவே இந்த விடயம் தொடர்பாக  கவனத்திற் கொண்டு அவ்வாரத்தினை விடுமுறை வாரமாக்குவதோடு, மாற்றீடாக ஓகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலுள்ள சனிக்கிழமை நாட்களில்  பாடசாலை இடம்பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும்  கல்வி அமைச்சிரிடம் அமைச்சர் ஹலீம் மேலும் கோரிக்கையினை விடுத்துள்ளார்.

-இக்பால் அலி


No comments:

Post a Comment