மரண தண்டனை பற்றி தகவல் எதுவும் இல்லை: சிறைச்சாலை நிர்வாகம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 3 July 2019

மரண தண்டனை பற்றி தகவல் எதுவும் இல்லை: சிறைச்சாலை நிர்வாகம்


இலங்கையில் மரண தண்டனையை அமுலுக்குக் கொண்டுவரவுள்ளதாகவும் அதனூடாக போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தப் போவதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்து வரும் நிலையில், சிறைச்சாலை நிர்வாகத்துக்கு அவ்வாறான அறிவுறுத்தல் எதுவும் கிடைக்கப்பெறவில்லையென தெரிவிக்கப்படுகிறது.


போதைப் பொருள் வர்த்தகத்தை ஒழிக்க இதுவே வழியென தெரிவிக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தாம் முன்னெடுப்புகளை செய்து வருவதாகவும் அதனால் தமக்கு உயிராபத்து ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

இந்நிலையிலேயே, சிறைச்சாலை நிர்வாகம் இது பற்றி எதுவும் தெரியாது என தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment