சஹ்ரானை அப்போதே ஏன் தண்டிக்கவில்லை: சிங்ஹல ராவய கேள்வி! - sonakar.com

Post Top Ad

Thursday, 11 July 2019

சஹ்ரானை அப்போதே ஏன் தண்டிக்கவில்லை: சிங்ஹல ராவய கேள்வி!


2017ம் ஆண்டு காத்தான்குடியில் சஹ்ரான் குழுவினர் முஸ்லிம்களுள் பிறிதொரு பகுதியினர் மீது தாக்குதல் நடாத்திய சம்பவத்தின் பின்னணியில் அப்போதே சஹ்ரான் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியதேன் என வினவி சட்டமா அதிபருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது சிங்ஹல ராவய.


குறித்த அமைப்பின் செயலாளரும் ஞானசாரவின் சகாவுமான மாகல்கந்தே சுகந்த தேரர் இக்கடிதத்தை நேரடியாக சட்டமா அதிபரிடம் ஒப்படைத்துள்ளார்.

காத்தான்குடியில் கடும்போக்குவாதியாக வளர்ந்து வந்த சஹ்ரான் அப்பகுதியில் நிலவி வந்த கொள்கை இயக்க முரண்பாடுகளினால் வேறு தரப்புகளினால் ஆதரிக்கப்பட்டு வந்ததாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கும் அதேவேளை, குறித்த சந்தர்ப்பத்தில் சஹ்ரானுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment