குருநாகலில் இருந்தே அதிக பஸ்கள்: கண்டி நிலவரம் சுமுகம் - sonakar.com

Post Top Ad

Sunday, 7 July 2019

குருநாகலில் இருந்தே அதிக பஸ்கள்: கண்டி நிலவரம் சுமுகம்


கண்டியில் இன்று இடம்பெற்ற பொது பல சேனா கூட்டம் நினைத்த அளவில் வெற்றி பெறாத நிலையில் சுமுகமாக முடிவுற்றுள்ளதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த மூன்று தினங்களாக பிரதேசத்தின் சமூக முக்கியஸ்தர்கள், சிவில் அமைப்புகள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக பெருமளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் இன்று மாலை 5.35 அளவில் எடுக்கப்பட்ட படத்தினையே மேலே காண்கிறீர்கள்.

இறுதியாக அங்கிருந்து வெளியேறும் பஸ்கள் பெரும்பாலும் குருநாகல் பக்கமே பயணிப்பதாக களத்திலிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

-SH

1 comment:

Abdul said...

Bhudist terrorist meeting end.

Post a comment