ஓகஸ்ட் இறுதிக்குள் தெரிவுக்குழுவின் அறிக்கை! - sonakar.com

Post Top Ad

Thursday, 18 July 2019

ஓகஸ்ட் இறுதிக்குள் தெரிவுக்குழுவின் அறிக்கை!


ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் நாடாளுமன்ற தெரிவுக்குழு நடாத்தி வரும் விசாரணையினடிப்படையிலான இறுதி அறிக்கை ஓகஸ்ட் மாதம் 25ம் திகதியளவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதியும் விசாரணைக்குட்படுத்தப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஏலவே பல அரச அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னார்வமாக சாட்சியளிக்க முன் வந்தவர்கள் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் என பல தரப்பினர் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

முக்கியமாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் கடடாய விடுமுறையில் இருக்கும் பொலிஸ் மா அதிபரின் சாட்சியங்களின் அடிப்படையில் அரசுக்கு ஏலவே உளவுத் தகவல் கிடைக்கப் பெற்றிருந்தும் ஈஸ்டர் தாக்குதல்களைத் தவிர்ப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென புலனாகியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றும் ஜனாதிபதி, அவ்வேளையில் வெளிநாடு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment