என் தலைக்கு குறி வைக்கப்பட்டுள்ளது: மைத்ரி - sonakar.com

Post Top Ad

Tuesday, 2 July 2019

என் தலைக்கு குறி வைக்கப்பட்டுள்ளது: மைத்ரி


போதைப்பொருளுக்கு எதிரான தனது போராட்டத்தின் விளைவால் தனக் உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்குவதற்கான தனது தீர்மானத்தை எதிர்த்து அடிப்படை உரிமை மீறல் வழக்கும் தொடரப்பட்டுள்ளதாகவும் தான் சளைக்கப் போவதில்லையெனவும் பொலன்நறுவயில் வைத்து இன்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேற்கு நாடுகள், மனித உரிமை அமைப்புகள் இலங்கையில் மரண தண்டனை அமுலுக்கு வருவதை எதிர்த்து கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment