நாமல் ராஜபக்ஷ யாழ் நாகவிகாரைக்கு விஜயம் - sonakar.com

Post Top Ad

Monday, 29 July 2019

நாமல் ராஜபக்ஷ யாழ் நாகவிகாரைக்கு விஜயம்


யாழ்ப்பாணத்திற்கு திங்கட்கிழமை (29)  பயணம் மேற்கொண்டுள்ள ஹம்பாந்தோட்டை  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குழுவினர்  காலை 10 மணியளவில்   நாகவிகாரை விகாராதிபதி மீகஹ யதுரே ஸ்ரீ விமல தேரரை சந்தித்து கலந்துரையாடியதுடன் ஆசிர்வாதத்தையும் பெற்று கொண்டனர்.


இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர்  அங்கஜன் இராமநாதன் மற்றும் ஸ்ரீ பொதுஜ‌ன‌ பெர‌முன‌ க‌ட்சி யாழ் மாவட்ட முக்கியஸ்தர்கள்  இவ்விஜயத்தின் போது உடனிருந்தனர்.

மேலும் இன்று   யாழ் ஆயர் இல்லம் , நல்லூர் ஆதின குரு முதல்வர்,   முஸ்லிம் மக்கள் தரப்பு , விளையாட்டு கழகங்கள் , யாழ் வணிகர் கழகம் என்பவற்றுடன் சந்திப்பில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வடமராட்சி அங்கஜனின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில்  மக்கள் மன்றம் ஒன்றும்  அங்குரார்பணம் செய்யப்படவுள்ளது.பிற்பகல் 2.00 மணிக்கு வல்வெட்டி விநாயகர் வித்தியாலய மைதானத்தில் (வல்வெட்டி அலுவலகம் முன்பாக)  நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-பாறுக் ஷிஹான்

No comments:

Post a comment