உளவுத் தகவல்களை அலட்சியம் செய்து வட்ஸ்அப்பில் கசிய விட்டார்கள்: ஹேமசிறி - sonakar.com

Post Top Ad

Sunday, 21 July 2019

உளவுத் தகவல்களை அலட்சியம் செய்து வட்ஸ்அப்பில் கசிய விட்டார்கள்: ஹேமசிறி


ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப் பெற்ற உளவுத் தகவல்கள் உயரதிகாரிகளால் முற்றாக அலட்சியம் செய்யப்பட்டுள்ளமை புலனாகியுள்ள நிலையில், ஒரு சிலர் தமக்குக் கிடைக்கப் பெற்ற தகவல்களை வட்ஸ்அப்பில் கசிய விட்டதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் வழங்கியுள்ளார் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ.


சம்பவம் இடம்பெற 14 நாட்கள் முன்பாகவே பல முக்கிய தகவல்கள் கிடைக்கப் பெற்ற போதிலும் சில முக்கிய தகவல்களை 'உறுதி செய்யப்படாத' தகவல் என உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஹேமசிறி மேலும் விளக்கமளித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோவிடம் அண்மையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 09 மணி நேர விசாரணை நடாத்தியிருந்தனர். இதன் போதே இவர் இத்தகவல்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment