மரண தண்டனைக்கு தடை வரும் நாள் 'சோக தினம்' - sonakar.com

Post Top Ad

Monday, 15 July 2019

மரண தண்டனைக்கு தடை வரும் நாள் 'சோக தினம்'


மரண தண்டனை அமுலுக்கு வருவதற்கு எதிராக  நாடாளுமன்றில் பிரேரணை நிறைவேற்றப்படுமாக இருந்தால் அது இலங்கையின் வரலாற்றில் சோக தினமாக இருக்கும் என தெரிவிக்கிறார் மைத்ரிபால சிறிசேன.

இந்நாட்டினை முழுமையாக முன்னேற்ற வேண்டுமாயின்  போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் எனவும் அதனைத் தான் முன்னெடுக்க முயற்சிக்கின்ற நிலையில் தற்போது அதற்கு நாடாளுமன்றம் ஊடாக தடை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் மைத்ரி தெரிவிக்கிறார்.

இதேவேளை, போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிப்பதற்கு மரண தண்டனை நிறைவேற்றுவது தீர்வாகாது என மஹிந்த ராஜபக்ச அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment