தலதா மாளிகையைத் தாக்கத் திட்டமிட்ட சஹ்ரான் குழு: திவயின புது புரளி - sonakar.com

Post Top Ad

Friday, 5 July 2019

தலதா மாளிகையைத் தாக்கத் திட்டமிட்ட சஹ்ரான் குழு: திவயின புது புரளிதலதா மாளிகை மற்றும் களுவாஞ்சிக்குடி கோயில் ஒன்றையும் சஹ்ரான் குழுவினர் தாக்கத் திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியிட்டுள்ளது அண்மைக்காலமாக தீவிர முஸ்லிம் விரோத செயற்பாடுகள் மற்றும் செய்திகளை வெளியிட்டு வரும் திவயின.இவ்வாறு வழிபாட்டுத்தளங்களில் தாக்குதல் நடாத்துவதற்கு 11 தற்கொலைக் குண்டுதாரிகள் தயாராகவிருந்ததாக அண்மையில் கைதான சஹ்ரானின் சகாக்களிடம் நடாத்தப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக இப்பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மருத்துவர் ஷாபி விவகாரம் உட்பட பெரும்பாலான முஸ்லிம் விரோத செய்திகளை திவயின வெளியிட்டு வருவதுடன் அதனை அடிப்படையாகக் கொண்டு பெரமுன தரப்பினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிபபிடத்தக்கது.

No comments:

Post a comment