தபால் சேவை ஊழியர்கள் 48 மணி நேர வேலை நிறுத்தத்துக்கு முஸ்தீபு - sonakar.com

Post Top Ad

Tuesday, 16 July 2019

தபால் சேவை ஊழியர்கள் 48 மணி நேர வேலை நிறுத்தத்துக்கு முஸ்தீபு


தபால் சேவை ஊழியர்கள் இன்று மாலை 4 மணி முதல் இரு தினங்கள் வேலை நிறுத்தம் ஒன்றில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.அமைச்சர் ஹலீமின் பதவிக் காலத்தில் இவ்வாறு பல தடவைகள் வேலை நிறுத்தப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்படப்டுள்ளதன் தொடர்ச்சியில் சம்பளம் மற்றும் பணியாளர்களை சேர்த்துக் கொள்ளும் முறைமைகளில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்களை அடிப்படையாக வைத்து வேலை நிறுத்தத்தில் குதிக்கப் போவதாக தெரிவிக்கிறது தபால் சேவைகள் ஊழியர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம்.

இரு தினங்கள் கொழும்பு மத்திய பரிமாற்று நிலையத்தில் இடம்பெறவுள்ள வேலை நிறுத்தம் பயனளிக்காவிட்டால் அதன் பின் நாடளாவிய வேலை நிறுத்தம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment