ரத்கம: துப்பாக்கிச் சூட்டில் 26 வயது நபர் பலி! - sonakar.com

Post Top Ad

Sunday, 21 July 2019

ரத்கம: துப்பாக்கிச் சூட்டில் 26 வயது நபர் பலி!


ரத்கம பகுதியில் நேற்றிரவு 9.20 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் 26 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.வேவதெனிய - கப்புமுல்ல பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் காயமடைந்து வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையிலேயே மரணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஈஸ்டர் தாக்குதலையடுத்து குறைந்திருந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் மீண்டும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment