UK - அமெரிக்காவிடமிருந்து $2 பில்லியன் கடன்: மகிழ்ச்சியில் ரணில் - sonakar.com

Post Top Ad

Tuesday 25 June 2019

UK - அமெரிக்காவிடமிருந்து $2 பில்லியன் கடன்: மகிழ்ச்சியில் ரணில்



ஈஸ்டர் தாக்குதலின் பின் இலங்கைக்கு இனிமேல் எந்த நாடும் கடன் தராது என சொல்லப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் ஐக்கிய இராச்சியமும் அமெரிக்காவும் இணைந்து 2 பில்லியன் டொலர் நிதியை கடனாகத் தந்திருப்பதாக மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார் ரணில் விக்கிரமசிங்க.



2020க்குள் மஹிந்த ராஜபக்ச பட்ட கடன்கள் எல்லாம் அடைக்கப்பட்டு, இலங்கை கடனற்ற நாடாக உருவாகும் என கடந்த காலங்களில் தெரிவித்து வந்த நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்க தற்போது இவ்வாறு மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் மலேசிய Hyrax Oil நிறுவனத்துடன் இணைந்து முத்துராஜவலவில் உருவாகியுள்ள தொழிற்சாலையை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ரணில் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment