மத்திய வங்கிக்கும் தெரியாமல் சவுதி 'பணம்': ஹிஸ்புல்லாஹ் மீது புதிய குற்றச்சாட்டு - sonakar.com

Post Top Ad

Monday 24 June 2019

மத்திய வங்கிக்கும் தெரியாமல் சவுதி 'பணம்': ஹிஸ்புல்லாஹ் மீது புதிய குற்றச்சாட்டு



மட்டக்களப்பு கம்பஸ் எனும் பெயரில் முன்னாள் கிழக்கு ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் நிர்மாணித்து வரும் தனியார் கல்வி நிறுவனத்துக்கு சவுதி அரேபியாவிலிருந்து 3000 மில்லியன் ரூபா பணம் (வட்டியில்லாக் கடன்) பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் அது எவ்வாறு நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்பதற்கு ஆதாரமில்லையெனவும் அது தொடர்பில் விசாரணை நடாத்தப் போவதாகவும் தெரிவிக்கிறது கல்வி மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை மேற்பார்வைக் குழு.



சவுதி அரேபியாவைச் சேர்ந்த நான்கு தனவந்தர்கள் ஊடாக இவ்வாறு நிதி பெறப்பட்டுள்ள போதிலும் அரச வங்கிகளான மத்திய வங்கிக்கோ அல்லது இலங்கை வங்கிக்கோ தெரியாமல் பெருந்தொகை பணம் எவ்வாறு நாட்டுக்குள் வந்தது என்பது தொடர்பில் விசாரணை நடாத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஹிஸ்புல்லாஹ்வின் புதல்வர் தரும் தகவல்கள் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருப்பதாகவும் குறித்த கல்வி நிறுவனம் அமையப் பெற்றுள்ள இடத்தில் அவ்வாறானதொரு பல்கலைக்கழகத்தை முன்னெடுத்துச் செல்ல முடியுமா என்பதும் சந்தேகமாக உருவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

முறையான அரச அனுமதி பெற்றே இக்கல்வி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதாக ஹிஸ்புல்லாஹ் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment