மிதி பலகை உடைந்து வீழ்ந்ததில் இருவர் மரணம் - sonakar.com

Post Top Ad

Sunday, 9 June 2019

மிதி பலகை உடைந்து வீழ்ந்ததில் இருவர் மரணம்


கொழும்பு - கண்டி பயணத்தில் ஈடுபட்டிருந்த இ.போ.ச பேருந்து ஒன்றின் மிதிபலகை உடைந்து வீழ்ந்ததில் அதில் பயணித்த பயணிகள் இருவர் மரணித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.


பேருந்து நடத்துனரும் பயணி ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் சம்பவம் பஹல கடுகன்னாவ பகுதியில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்குளி டிப்போவிலிருந்து கண்டிக்குப் பயணித்த பேருந்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் மிதிபலகை உடைந்து வீழ்ந்ததில் கீழே விழுந்த இருவரும் சக்கரத்தில் சிக்கிக் கொண்டதாக பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.

No comments:

Post a comment