ஹிஸ்புல்லாஹ்வின் 'பேச்சுக்கு' எதிராக பொலிசில் முறைப்பாடு - sonakar.com

Post Top Ad

Monday, 10 June 2019

ஹிஸ்புல்லாஹ்வின் 'பேச்சுக்கு' எதிராக பொலிசில் முறைப்பாடு


இலங்கையில் சிறுபான்மையாக இருக்கின்ற போதிலம் உலகில் முஸ்லிம்கள் பெரும்பான்மையானவர்கள் என அண்மையில் காத்தான்குடியில் வைத்து முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்ததாகக் கூறும் கருத்தின் பின்னணியில் அவருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.இம்முறைப்பாட்டை மேற்கொண்டுள்ள அகுனுகல்ல ஸ்ரீ ஜினாநந்த தேரர் ஹிஸ்புல்லாஹ்வின் பேச்சு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

அத்துடன் இவ்வாறான பேச்சுக்கள் இனங்களுக்கிடையில் விரோதத்தை வளர்க்கும் செயல் எனவும் குறித்த தேரர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment