சமலை விட கோட்டாபே தகுதியானவர்: ரோஹித - sonakar.com

Post Top Ad

Thursday, 27 June 2019

சமலை விட கோட்டாபே தகுதியானவர்: ரோஹிதமஹிந்த ராஜபக்ச குடும்பத்திலிருந்தே பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுசெய்யப்படும் நிலையில் சமல் ராஜபக்சவை விட இளையவர் கோட்டாபே ராஜபக்ச அதற்குத் தகுதியானவர் என கருத்து வெளியிட்டுள்ளார் மஹிந்தவின் இளைய புதல்வர் ரோஹித ராஜபக்ச.பெரிய தந்தையான சமல் அனுபவிமிக்கவராக இருக்கின்ற போதிலும் அதிக தகைமை கோட்டாபேக்கு இருப்பதாகவும் அவர் உறுதியான முடிவுகளை எடுக்கவல்லவர் எனவும் சமல் அனைவரையும் அனுசரிக்கும் மனப்பான்மை உள்ளவர் எனவும் ரோஹித மேலும் தெரிவித்துள்ளார்.

கோட்டாபேவை முன்நிறுத்துவதே பெரமுனவின் வெற்றிக்கு வழி வகுக்கும் எனவும் ரோஹித தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment