மங்கள - ராஜித - சத்துரவுக்கு கம்பஹா விகாரைகளுக்கு செல்லத் தடை! - sonakar.com

Post Top Ad

Tuesday, 4 June 2019

மங்கள - ராஜித - சத்துரவுக்கு கம்பஹா விகாரைகளுக்கு செல்லத் தடை!மங்கள சமரவீர, ராஜித சேனரத்ன மற்றும் அவரது புதல்வர் சத்துர சேனாரத்ன ஆகியோர் கம்பஹா மாவட்டத்தில் எந்தவொரு விகாரைக்குள்ளும் நுழைய முடியாதவாறு தடை விதித்துள்ளது கம்பஹா பௌத்த துறவிகள் சங்கம்.பிக்குகளை அவமதிக்கும் வகையில் கருத்துரைத்து வருவதாக குற்றஞ்சாட்டியே இவ்வாறு இம்மூவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பஹலகம சோமரத்ன தேரரின் தலைமையில் கூடிய சங்கமே இவ்வாறு முடிவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறே பௌத்த தலைமைத்துவம் முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment