மாவில்மட: அமைச்சர் ஹலீமுக்கு ஆதரவாளர்கள் வரவேற்பு - sonakar.com

Post Top Ad

Sunday 23 June 2019

மாவில்மட: அமைச்சர் ஹலீமுக்கு ஆதரவாளர்கள் வரவேற்பு


இம்முறை ஜனாதிபதித் தேர்தல் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து போட்டியிடும் வேட்பாளரே வெற்றி பெறுவார்.  வேட்பாளர்களுக்கான  தெரிவு முறைகள்  பற்றி கட்சியின் உயர் மட்டத்தில் தொடரேச்சியாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.  எல்லோரும் எதிர்பார்க்கக் கூடிய வெற்றிபெறும் ஜனாதிபதி வேட்பாளரே நிறுத்தப்படவுள்ளார். என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.


முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் அவர்கள் பதவியேற்றதை அடுத்து ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதி ஆதரவாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட வரவேற்பு வைபவம் கண்டி மாவில்மட அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த வரவேற்பு வைபவத்தில் கலந்து கொண்ட முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், பெரும்பான்மையின மக்களுடன் சகோதர வாஞ்சையுடன் சேர்ந்து ஒற்றுமையாக வாழக் கூடிய தன்மையை கொண்ட கட்சிதான் ஐக்கிய தேசிய கட்சி. அந்த வகையில் முஸ்லிம் மக்களுடைய அதிக ஆதரவு  ஐக்கிய தேசிய கட்சி  பக்கம் உள்ளது என்பதை எல்லோருக்கும் நன்கு தெரிந்த விசயம். நான் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதி என்ற வகையில் நாங்கள் பெரும்பான்மையின மக்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற உரிமையுடனேயே நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். எவ்வாறாயினும் எதிர்கட்சியினர் எத்தகைய சூழ்ச்சிகளைச் செய்தாவது ஆட்சியை கைப்பற்ற முயற்சி செய்த போதிலும் அதிலும் இயலாமைப் போனதை நாங்கள் அறிவோம். 

எந்தச் சந்தர்ப்பத்திலும் தேர்தல் வந்தால் ஐக்கிய தேசிய கட்சி வெற்றியே பெறும்  இந்த நாட்டின் நன்மைக்காகவும் பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு  முஸ்லிம் அமைச்சர் யாவரும்  ஒன்றாகத் தீர்மானம் எடுத்து பதவி துறந்தோம். கண்டியில் அப்பொழுது இருந்த சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு பதவி துறக்க வேண்டி நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நாங்கள் பதவி துறந்தவுடன் அந்தப் பேரணி பேராதனையுடன் இடை நிறுத்தப்பட்டு விட்டது. 

எனினும் அதனைத் தொடர்ந்து குற்றமற்றவர்கள் பதவியை ஏற்க வேண்டும் என்று கண்டி மஹா சங்க நாயக்கர்கள்; .  பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பு எதிர்தரப்பு உறுப்பினர்கள், விசேடாக ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதி மக்கள், கண்டி மாவட்ட மக்கள்  மற்றும் எல்லா தரப்பினர்கள் இருந்தும் விடுத்த கோரிக்கைக்கு இணங்க நாங்கள் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அமைச்சர் கபீர் காசிம்  நானும் மீண்டும் இந்த பதவியை ஏற்றுக் கொண்டோம். இதில் நானும் அமைச்சர் கபிர் ஹாசிம்  ஆகிய இருவருமே ஐக்கிய தேசிய கட்சி பிரதிநிதிகள்.  டி. எஸ். சேனாநாயக்கவின் காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி உருவாக்கப்பட்டது. இந்த கட்சியில் சகல இன மக்களும்  ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டி எழுப்துவதற்காக உருவாக்கினார். பெரும்பான்மையினர்கள், சிறுபான்மையினர்கள் எல்லாம் ஒன்றிணைந்தவர்களைக் கொண்ட கட்சிதான் ஐக்கி தேசிய கட்சி. நாங்கள் பதவி துறந்தமைக்காக சிலர் விமர்சனம் செய்தார்கள். 

என்னுடைய மாமா மறைந்த மர்ஹும் ஏ. சீ. எஸ். ஹமீத் அவர்கள்  ஏழு தடவை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். நான் மூன்று தடவை மாகாண சபையிலும் ஐந்து தடவை பாராளுமன்றத் தேர்தலிலும் மொத்தமாக எட்டுத் தடவை அரசியல் அதிகாரத்தில் நீங்கள் என்னை அமர வைத்துள்ளீர்கள். அமைச்சர் ஹமீதை  விட ஒரு தேர்தலை அதிகப்படி வென்று உங்களுக்காக சேவை செய்துள்ளேன். அமைச்சர் ஹமீத் 38 வருடங்கள் அரசியல் சேவை செய்தார். இந்தப் பிரதேசத்தில்  இன ரீதியிலான முரண்பாடுகள் ஒரு போதும் ஏற்படவில்லை. என்னுடைய காலத்தில் முரண்பாடுகள் ஏற்பாடாமல் சமூக ஐக்கியத்தையும்  நல்லிணக்கத்தையும்  கருத்திற் கொண்டு சேவையாற்றினேன்.  எனிம் கண்டி திகன சம்பவத்துடன் அக்குறணையிலும்  இன முரண்பாடான சம்பவம் இடம்பெற்றது.  இதை நிவர்த்தி செய்து கொண்டு பிரதேசத்தின் உட்கட்டமைப்பு ரீதியிலான அபிவிருத்தி வேகைளையும் சமாதானம் . ஒற்றுமை, நல்லிணக்கம் சகவாழ்வை கட்டி எழுப்பும் வகையில் சேவைகளையும் ஆற்ற முடிந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பௌத்த ,முஸ்லிம்  சமயத் தலைவர்கள் , முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், ஹரிஸ்பத்துவ, அக்குறணை, பூஜாப்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர்கள் பெரு எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டனர்.

-இக்பால் அலி


No comments:

Post a Comment