இரத்த ஆறு காண்பதே இனவாத ஊடகங்களின் இலக்கு: அலி சப்ரி - sonakar.com

Post Top Ad

Tuesday 4 June 2019

இரத்த ஆறு காண்பதே இனவாத ஊடகங்களின் இலக்கு: அலி சப்ரி



இந்நாட்டில் இரத்த ஆறை ஓடச் செய்கின்ற சாதனமாக  ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது, இந்த நெறியற்ற முறையை மாற்றியமைக்க வேண்டும் என தெரிவித்தார் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி.

இதுவரைக்கும் 2000க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் படையினரால் சோதனை செய்யப்பட்டுள்ளன. சகல பள்ளிவாசல்களிலும் வாள்கள் இருப்பதாக ஊடகங்கள் மக்கள் மத்தியில் கருத்தேற்றம் செய்துள்ளனர். குறிப்பாகச் சொல்லப் போனால் மஸ்கெலியாவிலுள்ள ஒரே ஒரு பள்ளிவாசலில் மட்டும் தான் வாள் தொடர்பான செய்தி உண்மை தன்மையுடன் பதிவுவாகியுள்ளது. அதற்காக வேண்டிய சட்ட நடடிக்கைகள் எடுங்கள். இந்த சந்தர்ப்பத்தில்  ஊடகங்கள் மக்களுக்கு சரியான வழி முறைகளைக் காட்ட வேண்டும் இதை ஒரு நாடமாய் காட்ட வேண்டாம். மனிதர்களைப் பிரித்து சுவர்கள் கட்டுவதில்லை. மனிதர்களுக்கிடையே பாலங்கள் அமைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.



அறிவு சார்ந்தோர் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் ஏற்பாட்டில் சகோதரத்துவத்துக்கான அறிவு சார் ஒன்று கூடல் நிகழ்வு கண்டி கெட்டம்பையிலுள்ள ஒக்ரோ ஹோட்டலில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் குழுக் கலந்துரையாடலி கலந்து கொண்ட   ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இவ்வாறு இதனைத் தெரிவித்தார்

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், உயிர்த்த ஞாயிறு சம்பவத்தின் பிற்பாடு தீவிரவாதத்துடன் தொடர்பில்லாத சந்தேகத்தின் பேரில் 2000 பேர் அளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐ சீ. சீ. டீ வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அவர்கள்  மூன்று மாதம் அவர்கள் சிறையில் இருக்க வேண்டும். இல்லையேனில் முறைப்பாட்டுப் பத்திரத்தை மாற்ற செய்ய வேண்டும தீவிரவாதத்துடன் தொடர் இல்லாதவர்களுக்கு சதாரண முறையில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும். பொலிஸார் அதைச் செய்வதில்லை. அது மாற்றம் பெற்ற வேண்டும் எனக் கருதுகின்றேன்.


தொடர்ச்சியாக செய்யப்படும் சோதனையின் போது ஒரு நபரை கூட அந்த சட்டத்தின் மூலம் தள்ளிவிடுமோமாயின் அது  ஒர் அசாதாரணமாகும். நான் பத்திரிகையில் படித்தேன். கடந்த  திகன சம்பவத்தின் பின்னர் சஹ்ரான் தீவிரவாதக் குழுவுடன் இணைந்துள்ளதாக அறிந்தேன். அது மட்டுமல்ல அலுத்கம பிரதேசத்திலும் ஒரு நபர் கைது செய்யப்பட்ட போது அலுத்தகம சம்பவத்தில் தம் நண்பருடைய காலுக்கு வெடில் பட்டதன் காரணமாக தொடர்பினை ஏற்படுத்திக் கொள்கிறார். இப்படித் தான் ஒவ்வொரு தாக்கங்களில் காரணமாக மனிதர்கள் இணைந்து கொள்கின்றனர். இதைத் தடுக்க நாங்கள் முயற்சி செய்ய வேண்டும். இதைத் தடுக்க வில்லையெனில் தீராத பிரச்சினையாகப் போய்விடும். 

ஊடகம் தமது கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும்.  இதை நாடகமாய் காட்ட வேண்டாம். நடிப்பாய் மாற்ற வேண்டாம். துவக்கின் ரவைகளை; கைப்பற்றினால் விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றைக் கைப்பற்றியதைப் போன்று காட்டுகின்றனர். இதைப் இப்படிக் காட்டுவதில்லை. இந்தப் பிரச்சினை நீங்கள் பூதகரமாகக் காட்டவே முயற்சி செய்கின்றார்கள்.

இந்த நாட்டில்  2550 பள்ளிகளே உள்ளன. இதுவரைக்கும் 2000 பள்ளிவாசல்கள் பரிசோதனை செய்து முடித்திருப்பார்கள். கருத்து என்னவெனில் சகல பள்ளிகளிலும் வாள் கண்டு பிடிக்கப்பட்தாக உள்ளன. எனினும் யாராவது சரி கூறினார்களா இலங்கையிலுள்ள 2000 பள்ளிகளில்  நான்கு பள்ளிவாசல்களில் தான் வாள்கள் இருந்தன. அதிலும் இரண்டு பள்ளிகள் மட்டுமே. அதில் ஒன்று சிலேவைலன் பள்ளிக்கு முதல் நாள் இரவு கொண்டு வைக்கப்பட்டுள்ளது. சீ. சீ. டீ வி கமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக பாதாளக் குழுவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அடுத்தது பள்ளி அருகிலுள்ள கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. அது மாளிகாவைத்தையில் ஆகும். நான் அறிந்த வரையில் ஒரே ஒரு பள்ளியில் இருந்துதான் வாள் கண்டு எடுக்கப்பட்டுள்ளது. அது மஸ்கெலியா பிரதேசத்தில் ஆகும். அந்த நபருக்கு சம்மந்தம் இருக்கிறது.வேண்டிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுங்கள். 

இன்னுமொரு பள்ளி வருடாந்தம் கந்தூரி அன்னதானம் வழங்குவதற்காக பயன்படுத்தும் உபகரணம் ஒன்றை கைது செய்து இருக்கிறார்கள். ஆனால் கருத்து என்ன உயர் சட்டத்தரணி ஒருவர் கேட்கிறார் நல்லிணகத்தை ஏற்படுத்துவதற்காகவா பள்ளிகளில் வாள்களை வைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள் என்று. எத்தனை பள்ளிகளில் வாள்கள் இருந்தன. சிங்கள மக்களை வெட்டுவதற்காக பள்ளிகளில் வாள்களை வைத்திருக்கின்றார்கள் என சகல மக்கள் மத்தியில் கருத்தேற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதற்கும் இதற்கும் எந்த சம்மந்தம் இல்லை என்றே. கருத்தேற்றம் என்னவென்றால் சஹ்ரான் குண்டு வெடிக்கச் செய்யும் போது எமது நாட்டிலுள்ள சிங்கள சகோதரர்களின் கழுத்தை வெட்டி விட்டு நாட்டைப் பிடிக்கப் போவதாக என்ற கருத்தை ஊடகம் மக்கள் மத்தியில் விதைத்துள்ளது. இதற்கு முழுமையாக ஊடகம் பதில் சொல்லியே ஆக வேண்டும். இரத்தைத் ஓட்டச் செய்கின்ற சாதனமாக ஊடகம் அமைந்துள்ளது. இந்த ஊடக நெறிமுறை இல்லாமற் செய்யப்பட வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் மனிதர்களை சரியான முறையில் வழிநடத்த வேண்டும். மனிதர்களைப் பிரித்து சுவர் கட்டுவதில்லை. பாலம் ஒன்றை உருவாக்கி மனிதனை ஒன்றுபடுத்த முயற்சிகள் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இராணுவப் படை அணியின்  பணிப்பாளர் மேஜர் செனறல்   நிசங்க ரணவன உரையாற்றுகையில், இது ஒரு அழகிய நாடு,   எல்லோருக்குமான நாடு. எமது பிரச்சினையை அறிவு பூர்வமாகச் சிந்தித்து மிகுந்த நிதானத்துடன் கட்டி எழுப்புவோம் என்று இராணுவப் படை அணியின்  பணிப்பாளர் மேஜர் சென்றல்   நிசங்க ரணவன தெரிவித்தார்.

பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் உபுல் திசாநாயக உரையாற்றுகையில், இந்த நாட்டுக்கு முஸ்லிம் பாடசாலை அவசியமில்லை. தமிழ் பாடசாலை அவசியமில்லை, சிங்களப் பாடசாலை அவசியமில்லை. இந்நாட்டுக்கு பொதுவான பாடசாலை அவசியமாகும். அந்த வகையில் பொதுவான கலாசாரம் உருவாகி புதிய மாற்றத்தை உருவாக்க முடியும். அந்த இடத்துக்குச் செல்ல எல்லோரும் முயற்சி செய்வோம். குறுகிய காலத்தில் தீவிர வாதத்திற்கு இராணுவத்தின் மூலம் தீர்வு எட்ட முடியுமாயின் நாம் நீண்ட கால திட்டத்தின் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வை  ஏன் எட்ட முடியாது. 

நாம் நினைக்கும் போது பள்ளிவாசல்களை அமைக்கின்றோம். நாம் நினைக்கும் போது கோயில்களை அமைக்கின்றோம். நாம் நினைக்கும் போது விஹாரைகளை அமைக்கின்றோம். இதனால் எமக்கு பிரச்சினை எழுந்துள்ளது. வீதிகளில் வணக்கஸ்தலங்களில் இருக்கும் இதன் மூலம் வாகன நெருசல்கள் ஏற்படுகின்றன. சமயத்தை தூர வைத்து விட்டு இந்த நாட்டில் பொதுச் சட்டத்துக்கு இடம்கொடுப்போம் என்று பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் உபுல் திசாநாயக தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கண்டி தலமா மாளிகையின் தியவதன நிலமே திலங்க பண்டார, முன்னாள் குருநாகல் கிறிஸ்த தேவாலயத்தின் பங்குத் தந்தை அருட் திரு  குமார இலங்கசிங்க, பௌத்த சமயத் தலைவர்கள். விசேட வளவாளராக இராணுவ படைப்பிரிவின் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி சேனக முத்துக்குமார , ராவய பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் விக்டர் ஐவன், பேராசிரியர் எம். எஸ் எம். அனஸ், பேராசிரியர் மு டியூடர் சில்வா, அஷ;nஷய்க் அம்ஹர் ஹக்கீடீன் உள்ளிட்ட பல முக்கிய அறிவு சார் பெருந்தகைளுடன் சிங்கள , தமிழ் சிவில் சமூக  அமைப்பினர் கலந்து கொண்டனர்.

-இக்பால்அலி


No comments:

Post a Comment