பேராளர் மாநாட்டில் வைத்து வேட்பாளர் அறிமுகம்: பசில் - sonakar.com

Post Top Ad

Friday, 21 June 2019

பேராளர் மாநாட்டில் வைத்து வேட்பாளர் அறிமுகம்: பசில்


ஓகஸ்ட் மாதம் 11ம் திகதி இடம்பெறவுள்ள பெரமுனவின் பேராளர் மாநாட்டில் வைத்து தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கிறார் பசில் ராஜபக்ச.பெரும்பாலும் கோட்டாபே ராஜபக்சவே பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வரை தமது வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கப் போவதில்லையென ஐக்கிய தேசியக் கட்சியும் தெரிவிக்கிறது.

ஜே.வி.பியும் வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கப் போவதாக தெரிவிக்கின்ற அதேவேளை மைத்ரிபால சிறிசேனவின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment