நாடு திரும்புகிறார் லசித் மலிங்க - sonakar.com

Post Top Ad

Tuesday, 11 June 2019

நாடு திரும்புகிறார் லசித் மலிங்க


பங்களதேஷுடனான இன்றைய போட்டியின் பின்னர் லசித் மலிங்க அவசரமாக நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மனைவியின் தாயார் உயிரிழந்துள்ள நிலையில் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ளும் நிமித்தமே மலிங்க இவ்வாறு நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்சமயம் இடம்பெற்று வரும் ஐ.சி.சி உலகக் கிண்ணத்துக்கான சுற்றுப் போட்டியில் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை ஒரு ஆட்டத்தை வென்று மூன்று புள்ளிகளைப் பெற்று ஆறாவது இடத்தில் இருக்கின்றமையும் இன்னும் இரண்டு மணி நேரத்தில் பங்களதேஷுடனான போட்டி ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment