ரதன தேரரின் செயலால் உண்மையான பிரச்சினை மறைந்து விட்டது: ஞானசார - sonakar.com

Post Top Ad

Tuesday, 4 June 2019

ரதன தேரரின் செயலால் உண்மையான பிரச்சினை மறைந்து விட்டது: ஞானசாரஅத்துராலியே ரதன தேரர் தன்னிச்சையாக உண்ணாவிரதத்தில் இறங்கியதன் ஊடாக நாடு எதிர்நோக்கும் உண்மையான பிரச்சினை மீண்டும் நிலத்தடி சமாச்சாரமாக மறைக்கப்பட்டு விட்டது என தெரிவிக்கிறார் ஞானசார.இலங்கைக்குள் வெளிநாட்டு கலாச்சார, விவகாரங்களை உட்புகுத்தி முஸ்லிம் சமூகத்தை வழி திருப்பிச் செல்லும் விவகாரங்களை சரிவரப் புரிந்து கொண்டு அதனை முறியடிப்பதற்கான செயற்திட்டத்தை முன்னெடுக்க வேண்டுமே தவிர, ஒவ்வொருவரும் தனித்தனியாகப் பிரிந்தால் அடிப்படைவாதத்துக்கு எதிரான போராட்டம் முடிவுறாது எனவும் அவர் தெரிவிக்கிறார்.

இப்பின்னணியில் ஜுலை 7ம் திகதி நாட்டின் எதிர்காலம் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் அடிப்படையிலான செயற்திட்டம் ஒன்றைத் தான் முன் வைக்கப் போவதாகவும் அதன் பின் முழுக்கவும் இதனைத் தமது தலைமைத்துவத்தில் முன்னெடுக்கப் போவதாகவும் இவ்விடயத்தில் இயங்க விரும்பும் துறவிகள் ஒரே குழுவாக தம்மோடு சேர்ந்தியங்க வேண்டும் எனவும் ஞானசார மேலும் தெரிவிக்கிறார்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை, பாரம்பரிய முஸ்லிம்களையும் அவர்களது வாழ்க்கை முறையையும் புறந்தள்ளி வெளிநாட்டு கலாச்சாரங்களை, மக்தப் போன்ற மத்ரசா முறைகள் ஊடாக அடிப்படைவாதத்தையும் சமூகத்துக்குள் புகுத்துவதாகவும் இவையனைத்து கலந்துரையாடித் தீர்வு காணப்பட வேண்டிய விடயங்கள் எனவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment