ஐ.தே.கட்சியினருக்கு 'பதில்' அமைச்சு பதவிகள் வழங்க மறுத்த மைத்ரி - sonakar.com

Post Top Ad

Wednesday, 12 June 2019

ஐ.தே.கட்சியினருக்கு 'பதில்' அமைச்சு பதவிகள் வழங்க மறுத்த மைத்ரி


முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி துறந்த நிலையில் அதற்கான பதில் அமைச்சு பதவிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியினால் முன் வைக்கப்பட்ட புதிய பெயர்களை ஜனாதிபதி நிராகரித்துள்ளமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.


இந்நிலையிலேயே, குறித்த அமைச்சுகளின் ராஜாங்க மற்றும் பிரதியமைச்சு பதவிகளை வகித்தவர்களை பதில் அமைச்சர்களாக நேற்றைய தினம் ஜனாதிபதி நியமித்துள்ளதாக அறியமுடிகிறது.

கடந்த வருட ஒக்டோபர் பிரளயத்தின் பின்னர் அமையப் பெற்ற அரசில் அமைச்சரவை எண்ணிக்கையை அதிகரிக்க ஐக்கிய தேசியக் கட்சி கடும் பிரயத்தனம் எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment