சஹ்ரான் குழுவோடு தொடர்பு: வெலிமட இளைஞன் கைது! - sonakar.com

Post Top Ad

Sunday, 16 June 2019

சஹ்ரான் குழுவோடு தொடர்பு: வெலிமட இளைஞன் கைது!


சஹ்ரான் குழுவோடு தொடர்பிலிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வெலிமடை, சில்மியாபுர பகுதியைச் சேர்ந்த 21 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மே மாதம் 12 - 13ம் திகதிகளில் சிலாபம், குருநாகல், மினுவங்கொட உட்பட்ட இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை நடாத்தியதன் பின்னணியில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் பெரும்பாலும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அதேவேளை ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் கைதுகளும் சோதனை நடவடிக்கைகளும் தொடர்கின்றன.

இந்நிலையில், குறித்த சஹ்ரானின் விளக்கவுரைகள் நடக்கும் இடங்களுக்கு சென்று வந்ததுடன் மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு விவகார நபர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment