இரு முஸ்லிம் ஆளுனர்களும் இராஜினாமா! - sonakar.com

Post Top Ad

Monday, 3 June 2019

இரு முஸ்லிம் ஆளுனர்களும் இராஜினாமா!தற்சமயம் நாட்டில் நிலவும் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு கிழக்கு மற்றும் மேல் மாகாண ஆளுனர்கள் தமது இராஜினாமா கடிதங்களை இன்று காலை ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளனர்.இந்நிலையில், ஜனாதிபதி அதனை ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ரிசாத் பதியுதீன் மற்றும் இரு ஆளுனர்களையும் பதவி நீக்க வேண்டும் என கோரி ரதன தேரர் உண்ணாவிரதம் இருந்து வருகின்ற அதேவேளை தம் மீதான விசாரணைகளை சுயாதீனமாக நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் நிமித்தமே இவ்வாறு இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்ததாக ஆளுனர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment