இன்னும் 100 - 200 தற்கொலைத் தாக்குதல்தாரிகள் உள்ளனர்: சம்பிக்க - sonakar.com

Post Top Ad

Saturday, 8 June 2019

இன்னும் 100 - 200 தற்கொலைத் தாக்குதல்தாரிகள் உள்ளனர்: சம்பிக்க


வெளிநாடுகளுக்குச் சென்று பயிற்சி பெற்று திரும்பிய மேலும் 100 இலிருந்து 200 வரையான தற்கொலைதாரிகள் நாட்டில் இருப்பதாக தெரிவிக்கிறார் சம்பிக்க ரணவக்க.இவர்களைக் கண்டறிந்து அழிக்காவிடின் நாடு பயங்கரவாதத்திலிருந்து மீள முடியாது என மேலும் தெரிவித்துள்ள சம்பிக்க தற்சமயம் தாக்குதல் அளவுக்கு இல்லையாயினும் கூட அதற்கு உதவி செய்து, ஆதரவளிக்கும் 2000 பேர் வரையும் இருப்பதாகவும் அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கிறார்.

ஈஸ்டர் தாக்குதல் பற்றி போதியளவு உளவுத் தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்த போதிலும் அரச உயர்மட்டத்தின் அலட்சியம் அல்லது திட்டத்தினால் அது தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்க முடியாமல் போயுள்ளதாகவே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் கட்டாய விடுமுறையில் இருக்கும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரது வாக்குமூலங்களும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment