புவக்பிட்டி முஸ்லிம் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்குத் தீர்வு - sonakar.com

Post Top Ad

Friday, 24 May 2019

புவக்பிட்டி முஸ்லிம் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்குத் தீர்வு


புவக்பிட்டி தமிழ் பாடசாலையில் பணியாற்றிய முஸ்லிம் ஆசிரியர்கள் அங்கு பணியில் தொடர முடியாத வகையில் ஏற்பட்ட இடையூறினையடுத்து மேல் மாகாண ஆளுனரின் தலையீட்டில் இடமாற்றம் பெற்றிருந்தனர்.இந்நிலையில், அவர்களின் இம்மாதத்துக்கான ஊதியத்தைப் பாடசாலைக்கு வந்தால் தான் பெற்றுக்கொள்ள முடியும் என குறித்த பாடசாலை அதிபர் தெரிவித்திருந்த போதிலும் அங்கு செல்வது பாதுகாப்பற்றது என்பதால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மீண்டும் ஆளுனர் அசாத் சாலி ஊடாக மாற்று வழியில் அதற்கான தீர்வைக் கண்டுள்ளனர்.

இப்பின்னணியில் குறித்த ஆசிரியர்களின் இம்மாத சம்பளத்தை ஓம கல கல்வி வலய அலுவலகத்தில் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக ஆளுனர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

No comments:

Post a comment