கும்புருமூலை அரச மரமுந்திரிகை தோட்டத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு - sonakar.com

Post Top Ad

Thursday, 9 May 2019

கும்புருமூலை அரச மரமுந்திரிகை தோட்டத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு


வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புருமூலை அரச மரமுந்திரிகை தோட்டத்தில், நேற்று(7) படையினரால் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.


வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இடம்பெற்ற தேடுதலின் போதே இரண்டு டீ 56 துப்பாக்கிகள்,  1 ஷொட்கன் , 2 மெகஸின், 4 ஜெலடின் கூறுகள் , 4 டெட்டனேட்டர்கள் , டீ 56 ரக ரவைகள் , பிஸ்டல் ரவைகள் போன்றன கைப்பற்றப்பட்டன.

இதேவேளை நேற்று(07) மீராவோடை பகுதியில் இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது, டீ56 ரக (திருத்தப்பட்ட)துப்பாக்கி ஒன்று  பாலம் ஒன்றின் கீழ் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டிருந்தது.

- ஜே.எப்.காமிலா பேகம்

No comments:

Post a Comment