ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக சட்டநடவடிக்கை: தயாசிறி - sonakar.com

Post Top Ad

Sunday, 19 May 2019

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக சட்டநடவடிக்கை: தயாசிறி


குளியாபிட்டி வன்முறைச் சம்பவத்தில் தான் தொடர்புபட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டு வரும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராகத் தான் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவிக்கிறார் தயாசிறி ஜயசேகர.அண்மைய வன்முறையின் போது ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களை தயாசிறி தலையிட்டு விடுவித்ததாக பரவலாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. எனினும், தான் பிங்கிரிய விவகாரத்தை ஹெட்டிபொலவுக்குள் கொண்டு வர வேண்டாம் எனக் கருதியே கைதிகளை மீண்டும் பிங்கிரியவுக்கு அழைத்துச் சென்றதாக தயாசிறி தெரிவிக்கிறார்.

இந்நிலையில், நேற்றைய தினம் தான் பொலிசாரிடம் அனைத்து விபரங்களையும் தெரிவித்திருப்பதாகவும் இதனூடாக பொலிசாருக்கு தெளிவு கிடைத்திருப்பதாகவும் தவறாக பேசி வரும் ரஞ்சனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தயாசிறி சூளுரைத்துள்ளார்.

2 comments:

Ayoub said...

தொத்த பபா

Ghouse said...

Are you a police officer or escort? Go and tell your bullshit to a deaf man.

Post a comment