தீவிரவாத குழுக்களுக்கு மத்திய கிழக்கிலிருந்தே 'நிதி' கிடைக்கிறது: தயாசிறி - sonakar.com

Post Top Ad

Tuesday, 7 May 2019

தீவிரவாத குழுக்களுக்கு மத்திய கிழக்கிலிருந்தே 'நிதி' கிடைக்கிறது: தயாசிறி


இலங்கையில் முஸ்லிம் சமூகத்துக்குள் உருவாகியுள்ள சில அடிப்படைவாத மற்றும் தீவிரவாத குழுக்களுக்கு சவுதி அரேபியா, கட்டார் போன்ற நாடுகளிலிருந்தே நிதியுதவிகள் கிடைக்கப் பெறுவதாகவும் அவற்றைக் கட்டுப்படுத்த அந்நாடுகள் காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கிறார் தயாசிறி ஜயசேகர.இதேவேளை, சுற்றுலாப் பயண விசாவில் இலங்கை வந்து, மார்க்க பிரச்சாரங்களில் ஈடுபடுவோர் குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டிய தேவையிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

அத்துடன், இலங்கையில் ஆளடையாளத்தை மறைக்கக் கூடிய வகையிலான முழுமையாக முகத்தை மூடும் ஆடைகள் தடை செய்யப்படுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனவும் தயாசிறி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment