பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள்: ACJU வேண்டுகோள் - sonakar.com

Post Top Ad

Wednesday, 15 May 2019

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள்: ACJU வேண்டுகோள்


கடந்த 13.05.2019 அன்று குருணாகல், கம்பஹா மாவட்டங்களில் இடம்பெற்ற வன்முறைத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுக்க முன்வருமாறு தனி மனிதர்களிடமும் அமைப்புக்களிடமும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுக்கிறது.


குழந்தைகளின் தேவைகளையும் ரமழான் கால தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்வதில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் தார்மிகக் கடப்பாடு எம் அனைவருக்கும் உண்டு என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரது பாவங்களையும் மன்னித்து, நல்லமல்களை அங்கீகரித்து, நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவானாக. ஆமீன்.

அஷ்ஷைக் ஏ.சி. அகார் முஹம்மத்
பிரதித் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

No comments:

Post a Comment