காலி பிரதேசத்தில் இதுவரை 66 பேர் சந்தேகத்தின் பேரில் கைது - sonakar.com

Post Top Ad

Saturday, 11 May 2019

காலி பிரதேசத்தில் இதுவரை 66 பேர் சந்தேகத்தின் பேரில் கைது


காலி பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் சோதனை நடவடிக்கைகள் நடாத்தப்பட்டு நிறைவுற்றுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர் பொலிசார்.காலி மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு கூட்டத்திலேயே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளதுடன் இதுவரை 66 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்துக்கிடமான 41 இடங்கள் சோதனையிடப்பட்டுள்ளதாகவும், அனைத்து பள்ளிவாசல்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் நுவன் வெதசிங்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a comment