அமித் வீரசிங்கவுக்கு 28ம் திகதி வரை விளக்கமறியல்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 15 May 2019

அமித் வீரசிங்கவுக்கு 28ம் திகதி வரை விளக்கமறியல்!

MZ6JJWK

அமித் வீரசிங்கவைக் கைது செய்ததும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்கள் இரண்டாவது வருடமாக தற்காலிகமாக தணிந்துள்ள நிலையில் குறித்த நபருக்கு 28ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.


முஸ்லிம்களின் வர்த்தகம், பொருளாதார நிலைகளை தவிடு பொடியாக்கியே ஆக வேண்டும் என வெறிகொண்டு இயங்கும் அமித் வீரசிங்க கடந்த தடவை தனது கும்பலுடன் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பொலிசார் 'நாடகமாடுவதாக' தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

இந்நிலையில், பிணையில் வெளிவந்த அமித் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தற்சமயம் தற்காலிகமாக வன்முறைகள் தணிந்துள்ள.இப்பின்னணியில் அமித்துக்கு மீண்டும் விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment