13ம் திகதி பற்றி எச்சரித்த மஹிந்த கருப்பு ஜுலை பற்றி அறிக்கை - sonakar.com

Post Top Ad

Monday, 13 May 2019

13ம் திகதி பற்றி எச்சரித்த மஹிந்த கருப்பு ஜுலை பற்றி அறிக்கை


13ம் திகதி நாட்டில் பாரிய விளைவுகள் வரக்கூடும் என்ற அச்சத்தை மையப்படுத்தி இதுவரை கருத்து வெளியிட்டு வந்ததுடன், பாடசாலைகள் மீளத் திறப்பதையும் மீள் பரிசீலனைக்குட்படுத்த வேண்டும் என தெரிவித்து வந்த மஹிந்த ராஜபக்ச, நாட்டில் மீண்டும் ஒரு கருப்பு ஜுலை உருவாக விட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.


நேற்றைய தினம் குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வுகளை நாட்டின் பாதுகாப்பு அமைச்சரான மைத்ரிபால சிறிசேனவுக்கு அமைச்சர்கள் ரிசாத் பதியுதீனும் - அகில விராஜுமே எடுத்துரைத்ததாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இன்று அவர் சீனா பயணமாகியுள்ளார்.

இந்நிலையில், தொடர் தாக்குதல்கள் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இன்னுமொரு கருப்பு ஜுலை உருவாக விட வேண்டாம் என தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment