சாய்ந்தமருதில் உயிர் தப்பியது சைனியின் குழந்தை! - sonakar.com

Post Top Ad

Sunday, 28 April 2019

சாய்ந்தமருதில் உயிர் தப்பியது சைனியின் குழந்தை!


சாய்ந்தமருதில் இடம்பெற்ற தற்கொலை வெடிப்பு சம்பவத்திலிருந்து உயிர் தப்பியது சஹ்ரானின் சகோதரன் சைனியின் குழந்தையென்பதற்கான வலுவான ஆதாரங்கள் சோனகர்.கொம்முக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.


இரு குழந்தைகளின் தந்தையான சைனி, அண்மைக்காலமாக தனது பழைய 'சூறத்தை' மாற்றி, தாடியின் அளவைக் குறைத்து நடமாடி வந்துள்ள நிலையில் தீவிரவாத செயல்களிலும் ஈடுபட்டு வந்திருப்பதாக நம்பப்படுகிறது.

குறித்த நபர், தனது ஆண் குழந்தையை மடியில் வைத்திருந்த அதேவேளை பெண் குழந்தையே உயிர் தப்பியுள்ளமையும், தாக்குதலில் உயிர் பிழைத்த பெண் ஹாஷிம் சகோதரர்களுள் ஒரவரது மனைவியாகவோ அல்லது இவர்களோடு பயணிக்க விளைந்த ஏனைய தீவிரவாதிகளுள் ஒருவரின் மனைவியாகவோ அல்லது இவர்களது தயாராகவோ இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், மாவனல்லை சூத்திரதாரிகளும் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதுடன் தீவிரவாத கும்பலின் முக்கிய உறுப்பினர்கள் முடக்கப்பட்டு அல்லது உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாய்ந்தமருதில் சஹ்ரானின் சகோதரர்கள் மற்றும் தந்தை உயிரிழந்தமையை நேற்றை வெளியிட்டிருந்தோம்.

No comments:

Post a Comment