நெய் எனக்கூறி மிருகக்கொழுப்பை விற்று வந்தவருக்கு பத்தாயிரம் அபராதம் - sonakar.com

Post Top Ad

Friday 8 March 2019

நெய் எனக்கூறி மிருகக்கொழுப்பை விற்று வந்தவருக்கு பத்தாயிரம் அபராதம்


நெய் என்று கூறி வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிருக கொழுப்பை நீண்ட காலமாக விற்பனை செய்து வந்த வர்த்தகர் ஒருவர் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகளினால்  மடக்கி பிடிக்கப்பட்டு வத்தளை  நீதி மன்றத்தினால் இன்று (08) அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


வத்தளையை சேர்ந்த இந்த வர்த்தகருக்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை, வத்தளை நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கில் அதிகார சபை சட்டத்திற்குஅமைவாக 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதோடு அவர் களஞ்சியப்படுத்தி வைத்திருந்த போலி நெய்யை  அழிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

நுகர்வோர் அதிகார சபைக்கு கிடைக்கப் பெற்ற நம்பகரமான தகவலின் அடிப்படையில் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம்  எம்.எஸ்.எம்.பௌசரின் பணிப்புரைக்கமைய,இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.அதிகார சபை அதிகாரிகள்  சுற்றிவளைத்து  இந்த வர்த்தகரை மடக்கிப்பிடித்துள்ளனர்.

-RB

No comments:

Post a Comment