ஹங்கேரிய பெண் மீது பாலியல் வல்லுறவு: ஒருவர் கைது! - sonakar.com

Post Top Ad

Monday, 4 March 2019

ஹங்கேரிய பெண் மீது பாலியல் வல்லுறவு: ஒருவர் கைது!


சுற்றுலாப் பயணியாக இலங்கை வந்த ஹங்கேரிய பெண்ணை வேனில் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்குட்டுபடுத்திய 27 வயது இலங்கை பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.


பயாகல பகுதியில் வசிக்கும் சஜித் நயனஜித் சில்வா என அறியப்படும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த நபர் பயன்படுத்திய வேனும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


குறித்த நபர் தொடர்பில் ஏலவே பல முறைப்பாடுகள் இருந்ததாகவும் சிசிடிவி உதவியில் வேனை அடையாளங்கண்டதாகவும் பொலிசார் மேலும் தகவல் வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment