கல்முனை - சாய்ந்தமருது: எச்சரிக்கையும் எதிர்பார்ப்பும் - sonakar.com

Post Top Ad

Saturday 2 March 2019

கல்முனை - சாய்ந்தமருது: எச்சரிக்கையும் எதிர்பார்ப்பும்


இவ்வருடத்தில் மாகாண சபைத் தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா முதலில் நடைபெறும்  என்ற புதிருக்கு இன்னும் தேசிய அரசியலில் விடை காணாத நிலையில், கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களின்போது வெற்றியையும், பதவிகளையும் நிர்ணைத்துக்கொள்வதற்காக அரசியல் கட்சிகளின் தலைமைகளினாலும், மக்கள் பிரதிநிதிகளினாலும் அளிக்கபபட்ட வாக்குறுதிகள் பல இன்னும் நிறைவேற்றப்படவில்லை. 

தேசிய பெரும்பான்மைக் கட்சிகளினாலும், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை தளமாகக் கொண்ட சிறுபான்மையினக் கட்சித் தலைமைகள் மற்றும் ஏனைய அதிகாரத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகளினாலும்; தேர்தல் காலங்களில் மாத்திரமின்றி, காலத்திற்குக் காலம் மக்களுக்கு அளிக்கப்படும் வாக்குறுதிகளினால் ஏமாற்றடைந்த மக்கள் அவ்வாக்குறுதிகளை பெற்றுத் தருமாறு போராட்டங்களையும், பணிப்பகிஷ்கரிப்புக்களையும், எச்சரிக்கைகளையும் முன்னெடுத்து வருவதைக் காண முடிகிறது.


இதில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள வாக்காளர்களினது வாக்குகளைப் பெற்றுக்கொள்ளவதற்காக முஸ்லிம் அரசியல் கட்சித் தலைமைகளினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில்  நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளையும் விடவும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளே அதிகமென மக்கள் கூறுவதை  மறுப்பதற்கில்லை.

முஸ்லிம் அரசியல் கட்சிகளினாலும் மக்கள், பிரதிநிதிகளினாலும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்றம் பெற்றுத் தரப்படும் என்ற வாக்குறுதியும் ஒன்றாகும். 

சமூக ரீதியாகவும், பிரதேச ரீதியாகவும் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக வாக்குறுதிகள் வழங்குகின்றபோது அவ்வாக்குறுதிகள் ஏனைய சமூக மற்றும் பிரதேசங்களுக்கு பாதகமான அல்லது சாதகமான பக்கவிளைவுகளை உருவாக்குமா? பிரதேச ஒருமைப்பாட்டுக்கும்;, சமூக நல்லிணக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துமா? ஓற்றுமையை சீர்குழைக்குமா? வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா?  என்ற சுயவிசாரணைகள் மேற்கொள்ளப்படுவதில்லை.

வாக்குறுதிகள் மீதான எதுவித சுயவிசாரணைகயுமின்றி தங்களது அரசியல் இருப்பைத் சமூகத்திலும், பிரதேசங்களிலும் தக்கவைத்துக்கொள்வதற்காக வழங்கிய வாக்குறுதிகள் ஏற்படுத்தியிருக்கும் விளைவுகளின் எதிரொலி கடந்த பல வருடங்களாக  கல்முனை மகாநகர எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருதூரிலும,; கல்முனையிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

அரசியல் தலைமைகளினால் அளிக்கப்பட்ட அவ்வாக்குறிதிகளை நிறைவேற்றுங்கள் என வாக்குறுதிக்களுக்காக வாக்குகளித்த மக்கள் கேட்பதில் எவ்வித தவறுமில்லை. அது அவர்களின் உரிமை. அதை எவரும்;கொச்சப்படுத்த முடியாது. ஆனால், இந்த உரிமைப் போராட்டத்தின் பக்க விளைவுகள் மற்றும்; வெளிப்படுத்தப்படுகின்ற கருத்துக்கள், கோஷங்கள், எச்சரிக்க்கைகள் தொடர்பில் உரிய தரப்புக்கள் சிந்திக்க, சுயவிசாரணை செய்ய வேண்டியதும் அவசியமாகும்.

இருப்பினும், அரசியல் ஏமாற்று வாக்குறுதித்; தொடரில் 2001ஆம் ஆண்டிலிருந்து சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்ற அதிகாரம் வேண்டுமென்ற கோரிக்கைகளும், கோஷங்களும் காலத்திற்குக்காலம் எழுப்பப்படுவதைக் காண முடிகிறது.

இப்பிரதேசத்திலுள்ள அரசியல்வாதிகள் சரிந்து செல்லும் தங்களது பிரதேச செல்வாக்கை தூக்கி நிமிர்த்துவதற்கும்,; சுயநல நிகழ்ச்சிநிரல் கொண்ட சில அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் அவர்களது செல்வாக்கை இப்பிரதேசத்தில் நிலைநிறுத்திக்கொள்வதற்கும் வௌ;வேறு நிலைகளின்று தனி உள்ளுராட்சி சபைக்கான இக்கோரிக்கையை முன்வைத்து வருவதாக் கூறப்படுகின்றபோதிலும், பிரிக்கப்படாத மாநகரமாக கல்முனை இருக்க வேண்டுமென்று தற்போதும் அப்பிரதேச மக்கள் சொல்லிக்கொண்டு இருப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

தனியான உள்ளுராட்சி சபையை பெறுவதற்கான போராட்டங்கள் 2017ஆம் ஆண்டில் வலுப்பெற்றிருந்த நிலையில், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற  கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் பிரதேச ரீதியாக தோடம்பழச் சின்னத்தினூடாக  வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு  சாய்ந்தமருதூரிலிருந்து 9 உறுப்பினர்கள் கல்முனை மாநகர சபைக்குத் தெரிவு செய்யப்பட்டதையும் நினைவூட்ட வேண்டியுள்ளது.

இவ்வாறான பின்னணியில் தற்போது மாகாணசபைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தேசிய அரசியலில் முன்நகர்த்தப்பட்டு வருகின்ற சூழலலில்; சாய்ந்தமருதூருக்கான தனியான உள்ளுராட்சி சபையைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் எச்சரிக்கை கலந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருதூரின் எச்சரிக்கையும் அரசியல் நகர்வுகளும்

'சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளுராட்சி சபையைப் பெற்றுத்தராவிட்டால் எதிர்வரும் தேர்தலில் கல்முனை தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக் கோட்டை உடைக்கப்படும். அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் தனியான உள்ளுராட்சி சபையைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தனர், பிரதமரும் உறுதியளித்தார். ஒன்றும் நடக்கவில்லை.   

தற்போது தேர்தல் வரப்போகிறது அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஹரீஸ் ஆகியோர் தனியான உள்ளுராட்சி சபையை பெற்றுத்தந்தால் முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்து முஸ்லிம் காங்கிரஸ் கோட்டையை நிரூபிப்போம். பெற்றுத் தரவிட்டால் சாய்ந்தமருதில் வேட்பாளர்களை நிறுத்தி முஸ்லிம் காங்கிரஸ் கோட்டையை உடைத்து கல்முனைத் தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸைத் தோற்றகடிப்போம்' என அண்மையில் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மகாநாட்டில்  பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனிபா குறிப்பிட்டிருக்கிறார்.

அவரின் பேச்சு அரசியல் ரீதியில் பல உண்மைகளை வெளிப்படுத்தியிருப்பதை நோக்க முடிகிறது. ஏனெனில், சாய்ந்தமருது இப்பிரதேசத்திலுள்ள ஓரிரு அரசியல்வாதிகளுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பதவிகளை வழங்கி அழகுபார்க்கும் நிலையிலும்,  எதிர்வரும் மாகாண சபை மற்றும் பொதுத்தேர்தல்களில் தேசிய காங்கிரஸின் சார்ப்பில் சாய்ந்தமருதுப் பிரதேசத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் களமிறககப்படுவதற்கான பேச்சுக்கள் இடம்பnறுவதாகக் கூறப்படும் இச்சந்தர்ப்பத்தில்; முஸ்லிம் காங்கிரஸைத் தவிர கல்முனைப் பிரதேசத்தில்; எந்தவொரு அரசியல் கட்சிக்கும்; செல்வாக்கு இல்லை என்பதை சொல்லாமல் சொல்லியிருப்பதுடன் ; முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கு இம்மாநகரத்தில் இன்னும் நிலைத்திருக்கிறது என்பதையும் உறுதிப்படுத்தியிருப்பதாகவே நோக்க முடிகிறது. 

இந்நிலையில், 'சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபையைப் பெற்றுத்தராவிட்டால் எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கோட்டையை உடைத்துக்காட்டுவோம் என பள்ளிவாசல் தலைவர்  கூறிய கருத்துக்கள் தன்னை மனவேதைனப்படுத்தியுள்ளதாகவும், நல்லதொரு சந்தர்ப்பத்தில்; இவ்வாறான கருத்துக்களை அவர் தெரிவித்திருக்கக் கூடாதென்றும், அவர் எங்களது கட்சியை மட்டும் இலக்கு வைத்து தெரிவித்துள்ளமை தனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக' இராஜாங்க  அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் கருத்து வெளியிட்டுள்ளதுடன் 'பள்ளிவசால் தலைவரின் கருத்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் ஏதும் ஒப்பந்தகளைச் செய்துள்ளாரா' என்ற கேள்வியும் அவரால் எழுப்பப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.

இச்சந்தர்ப்பத்தில், சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை வழங்குவது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் கடந்த செவ்வாய்க்கிழமை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தனவின் தலைமையில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூடீன், இராஜாங்க அமைச்சர்கள் ஹரீஸ், மஹ்றூப் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றிருக்கிறது.

கலந்துரையாடல் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்; மற்றும் அகில இலங்கi மக்கள் காங்கிரஸ தலைவர்கள் தங்களது கருத்துக்களையும்; தெரிவித்திருக்கிறார்கள். 'கல்முனை மாநகர சபையை வௌ;வேறு உள்ளுராட்சி மன்றங்களாக பிரிப்பது தொடர்பில் பல கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டியிருக்கிறது. இதற்கான குழுக்களை அமைத்து, விரைவில் தீர்வொன்றை எட்டுவதற்கு அழுத்தம் கொடுத்திருந்தோம், அந்த வகையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் வஜிர அபேவர்தன எங்களை அழைத்து பேசினார். 

சாய்ந்தமருது, கல்முனை, பள்ளிவாசல் நிருவாகத்தினர் மற்றும் சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து மருதமுனை, நற்பிட்டிமுனை கல்முனை தமிழ் பிரிவு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த  மக்கள் பிரதிநிதிகளையும் அழைத்து ஒன்றாகவும,; தனியாகவும் பேசுவதற்கு தீர்மானித்துள்ளோம். இந்தப் பேச்சுவார்த்தைகள் மூலம் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்துத் தரப்பினருடனும பேசி எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்க்கமான முடிவு எட்டப்படும்' என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் குறிப்பிட்டுள்ள அதேவேளை 'சாய்ந்தமருது உளளுராட்சி சபை கோரிக்கை தொடர்பில் எடுக்கப்படும் சுமூகமான முடிவுக்கு மக்கள் காங்கிரஸ் பூரண ஒத்துழைப்பு வழங்குமென மக்கள் காங்கிரஸ் தலைவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இச்சந்தர்ப்பத்தில், 'சாய்ந்தமருது மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுவதற்காகவே அரசு சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபையொன்றினை நிறுவது தொடர்பில் கலந்துரையாடல்களை நடாத்தி தீர்மானம் மேற்கொள்வதாகத் தெரிகிறது. சாய்ந்தமருது மக்கள் தொடர்ந்தும் பொய் வாக்குறுதிகளை சம்பத் தயாரில்லை' என சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனிபா ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான கருத்துக்களுக்கு மத்தியில், இவ்விவகாரத்தை முன்னெடுப்பதற்காக அமைச்சர்களான ரவூப் ஹக்கீம். ரிஷாட் பதியூடீன்,  இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உள்ளிட்ட உயர்மட்ட ஒழுவொன்று  மாகாணசபை உள்ளுராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்தவினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கலந்துரையாடலுக்கு சாய்ந்தமருதிலிருந்து எவரும்  அழைக்கப்படவில்லையெனவும் ; இக்குழுவில் சாந்தமருதைச் சேர்ந்த எவரும்; இணைத்துக்கொள்ளப்படவில்லையெனவும் கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிலர் அமைச்சர் வஜிர அபேவர்தனவை சந்தித்து தங்களது ஆதங்களைத் தெரிவித்திருப்பதாகவும், குழுவில் இணைத்துக்கொள்ளமாறு கோரிக்கை விடுத்திருப்பதாகவும் இதற்கிணங்க சாந்தமருது மக்கள் சார்பாக ஒருவரின் பெயரைத் தெரிவு செய்து தருமாறு அமைச்சர் கேட்டதற்கிணங்க ஒருவரின் பெயரை சிபாரிசு செய்து அமைச்சரைத் சந்தித்தவர்கள் வழங்கியிருப்பதாகவும் ஊடகச் செய்திகளில் காண முடிந்தது.

இவ்வாறன அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில் இவ்விடயம் தொடர்பில் கடந்த காலங்களிலும் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு கலந்துரையாடல் நடைபெற்று வாக்குறுதிகள் வழஙகப்பட்டு அவை நிறைவேற்றப்படவில்லை என்பதல்லாம் உண்மையென்றாலும், ஒரு பிரதேசத்திற்கான தீர்வு இன்னுமொரு பிரதேத்தில் பிரச்சினைகளை உருவாக்கக் கூடாது என்பதிலும் அக்கறை செயலுத்தப்படல் வேண்டும். ஏனெனில், கல்முனை மாநகர எல்லைகள் பல பிரதேங்களை உள்ளடக்கியது. முஸ்லிம்களும், தமிழர்களும், வாழும் பிரதேசமான கல்முனை மாநகர எல்லைகளின் நிர்வாகவும் அதன் வரலாற்றுப் பின்னணியும் தீர்மானங்களின் போது கவனத்திற்கொள்ளப்படுவதும் அவசியமாகும். 

கல்முனையின் வரலாறும் தீர்வின் எதிர்பார்ப்பும்

கல்முனைப் பிரதேசங்களினதும் இப்பிரதேசத்தில்; வாழும் சமூகங்களினதும் மத, கலை, கலாசாரப் பண்பாடுகள்,  சமூகக் கட்டமைப்புக்கள், சமூக உறவுகள், நிர்வாக நடைமுறைகள் போன்றவற்றின்; வரலாற்றுப் பரிணாமம் அல்லது பின்னணி எத்தகையது என்பதை இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் நன்கு அறிவார்கள். இப்பிரதேச மக்கள் இப்பிரதேத்தின் வரலாற்றுப் பரிணாமங்களை அறிந்துள்ள அளவுக்கு ஏனைய பிரதேச அரசியல்வாதிகளோ, சமூக அமைப்புக்களோ அல்லது மக்களோ, தனிநபர்களோ அறிந்திருப்பார்களா என்பது கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியது.

இருப்பினும், இப்பிரதேச மக்களின் ஒவ்வொரு விடயத்திலும் அவ்வப்போது சமூகக் கீறல்களும், சமூகக் காயங்களும் ஏற்பட்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அக்கீறல்களும் காயங்களும் வரலாற்றில் மறக்க முடியாத பதிவுகளை இப்பிரதேசம் வாழ் சமூகங்களுக்கிடையில் ஏற்படுத்தியிருந்தாலும். அக்கீறல்களும் காயங்களும் யாசகனின் காலிலுள்ள புண்ணாக தொடர்ந்து இருப்பதற்கு அரசியல்வாதிகளும் சமூக அமைப்புக்ளின் பிரதிநிதிகளும் காரணகர்த்தாக்;களாக இருந்துவிடக்கூடாது.

4,726 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட தற்போதைய கல்முனைத் தொகுதியானது 106,780 மக்கள் தொகையையும் 68,198 வாக்காளர்களையும் கொண்டுள்ளது.

கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவு, கல்முனை தமிழ் உப பிரதேச செயலகப் பிரிவு மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவு ஆகிய நிர்வாக பிரிவுகளைக் கொண்டதாக கல்முனைத் தேர்தல் தொகுதி உள்ளது.
2011ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின் பிரகாரம், கல்முனை முஸ்லிம் பிரதேசப் செயலகப்பிரிவின் 29 கிராம சேவகர் பிரிவுகளும் 10,459 குடும்பங்களையும் 29,094 வாக்காளர்களையும் கொண்டுள்ளதுடன் சிங்களவர்கள் 124 பேரையும் இலங்கைத் தமிழர்கள் 66 பேரையும் இந்தியத் தமிழர் 8பேரையும்  இலங்கை முஸ்லிம்கள் 44,306 பேரையுமாக 44,509 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. 

கல்முனை தமிழ் உப பிரதேச செயலகப் பிரிவின் 29 கிராம சேவகர்  பிரிவுகளும் 7,533 குடும்பங்களையும் 20,099 வாக்காளர்களையும் கொண்டுள்ளதுடன், 231 சிங்களவர்களையும்  26,564 இலங்கைத் தமிழர்களையும், 50 இந்தியத் தமிழர்களையும் 2376 இலங்கை முஸ்லிம்களையும் உள்ளடக்கியதாக 29,713 மொத்த மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. 

சாய்ந்தமருது பிரதேச செயலப்பிரிவின் 17 கிராம சேவகர் பிரிவுகளும் 6,081 குடும்பங்களையும் 16,936 வாக்காளர்களையும் கொண்டுள்ளதுடன் 25,389 முஸ்லிம்களை உள்ளடக்கிய 25,412 மக்கள் தொகையை கொண்டுள்ளது. இப்புள்ளிவிபரங்களில் தற்போது மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.

இவ்வாறான நிர்வாகப் பிரிவையும் மக்கள் தொகையையும் கொண்ட  கல்முனையின் வரலாற்றுப் பின்னணியை நோக்ககின்றபோது  பிரித்தானிய ஆட்சியில் கல்முனை நகரை 1869ஆம் ஆண்டு ஒரு நகராகவும் 1940ஆம் ஆண்டு பட்டினசபையாகவும் பிரகடனம் செய்த பின் 1946ஆம் ஆண்டு அதன் முதலாவது தேர்தல் பிரித்தானியரின் ஆட்சியின்போது  நடைபெற்றதாக வரலாற்றுப் பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

பிரித்தானியர் கரவாகுவை கல்முனை எனவும் அதன் எல்லையாக வடக்கே தாளவாட்டுவான் வீதிக்கும் தெற்கே கல்முனை ஸாகிறா கல்லூரி வீதிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தை வரைபடத்தில் கல்முனை எனக் குறித்து அதன் அந்தஸ்தை 1887ல் சனிட்டரி போட்டாக உயர்த்தினா.; இதுவே  கல்முனைப் பட்டின சபையின் எல்லையாகவும் இருந்தது. இவ்வாறு எல்லை வகுக்கப்பட்டு கல்முனை எனப் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதானது கல்முனை என்பது ஒரு இனத்திற்கான அல்லது ஒரு ஊருக்கான பிரதேசமாகக் கொள்ளத்தகாதது என்பதைப் புரிந்துகொள்ளச் செய்கிறது.

பண்டைய கல்முனையின் நிர்வாக எல்லையானது மூன்று நிர்வாக கிராம சபைகளையும் ஒரு பட்டின சபையையும் கொண்டிருந்தது. கரவாகு வடக்கு, கரவாகு மேற்கு, கரவாகு தெற்கு மற்றும் கல்முனை பட்டின சபை என்பன அவையாகும். கரவாகு வடக்கு கிராம சபை கல்லாறு, துறைநீலாவனை, பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு கிராமங்களைக் கொண்டிருந்தது. இருப்பினும், 1960ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது கல்லாறும் துறைநீலாவணையும் மட்டக்களப்பு மாவட்டத்தோடு இணைக்கப்பட்டன. 

கரவாகு மேற்கு கிராம சபை நற்பட்டிமுனை, மணற்சேனை, சேனக்குடியிருப்பு, துரவந்தியன்மேடு, ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாகவும். கரவாகு தெற்கு சபை சாய்ந்தமருது கிராமத்தை உள்ளடக்கியதாகவும் இருந்ததுடன், கல்முனைப் பட்டின சபையின் எல்லையானது கல்முனை சனிட்டரி போட்டின் எல்லையாக அதவாது, தாளவட்டுவான் வீதி முதல் கல்முனை ஸாகிறா வீதி வரையானது என கல்முனையின் வரலாற்றுப் பதிவுகள் சுட்டிக்காட்டுகிறது.

இவ்வாறு பட்டின சபையாக இருந்த கல்முனை 1987ஆம் ஆண்டு பிரதேச சபையாக தரம் உயர்த்தப்பட்டது. இதற்கான முதலாவது தேர்தல் 1994ஆம் ஆண்டு இடம்பெற்றது. இதன் பிற்பாடு மாநகர சபையாகத் தரம் உயர்தப்பட்ட பின் 2006ஆம் ஆண்டு இதற்கான முதலாவது தேர்தலும் நடைபெற்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

1994ஆம் ஆண்டு முதல் இன்று வரை  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனை உள்ளுராட்சி மன்றத்தின் ஆளும் தரப்பாகவும் தமிழ் கட்சிகள் உட்பட பல கட்சி உறுப்பினர்கள்  எதிர்தரப்பாகவும் இருந்து வந்துள்ளனர்.

ஏறக்குறைய 25 வருடங்கள் ஆட்சி செய்த முஸ்லிம் காங்கிரஸினால் கல்முனையில் சமூக உறவை ஏற்படுத்துவதற்கு எடுத்த முயற்சிகள் எவை?. ஒரு சமூகம் அல்லது ஒரு பிரதேசம் மற்றொரு சமூகத்தின் மீது அல்லது பிரதேசத்தின் மீத குற்றச் சுமத்தாது செய்த சேவைகள், மேற்கொண்ட அபிவிருத்திப் பணிகள் எத்தகையவை?. இவற்றிற்கு தமிழ் தரப்புகள் மற்றும் பிரதேசங்கள் வழங்கிய ஒத்துழைப்புகள் எவை? 

அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களது அதிகாரத்தின் மூலம் பெற்றுக்கொள்ளும் வளங்களை பயன்படுத்தி பாகுபாடின்றி சேவை செய்கின்றபோது ஒரு சமூகம் அல்லது ஒரு பிரதேசம் மற்றொரு சமூகத்தின் மீது அல்லது பிரதேசத்தின் மீது காழ்புணர்ச்சியையோ அல்லது குற்றச்சாட்டுக்களையோ முன்வைக்காது.

மாறாக, அதிகாரங்கள் முறை தவறிப் பயன்படுத்தப்படுமாயின், அதனால் பாதிக்கப்படுகின்ற சமூகம் அல்லது பிரதேசம் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ளாமலும் இருக்க முடியாது.

இவ்வாறான நிலையில்தான் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபைக் கோரிக்கையும் தமிழ் பிரிவுக்கான பிரதேச செயலகத்தை தனிப் பிரதேச செயலகமாக தரம் உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கைகளும் வலுப்பெற்றது என்பதையும் மறுக்க முடியாது.

கடந்த 2015ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது சாய்ந்தமருதூருக்கான தனியான உள்ளுராட்சி சபை வழங்கப்படும் என்ற வாக்குறுதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூலம் வழங்கச் செய்யப்பட்டதன்; பின்னர்தான் இக்;கோஷம் வழுப்பெற்றது என்பது நிதர்சனமாகும்.

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபைக்கான கோஷம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இதிலுள்ள சாதக பாதங்கள் குறித்து ஆரோக்கியமாகப் பேசப்பட்டு இதற்கான தீர்வு எட்டப்பட்டிருந்தால் தொப்புல்கொடி உறவாக விளங்கும்  சாய்;ந்தமருதூரிலும் கல்முனையிலும்  அதிகாரப் பசிக்காக பலிசொல்லும் நிலை உருவாகயிருக்காது. ஏட்டிக்குப் போட்டியான போராட்டங்கள் ஏற்பட்டிருக்காது. இவ்வாறான நிலையை உருவாக்கியவர்கள் இப்பிரதேச அரசியல் வாதிகளும் அவர்களின் தலைமைகளும் ஒரு சில தனிநபர்களும் என்பதை முழு நாடே அறியும்.

இருப்பினும், ஒரு தேசத்தில், ஒரு சமூகத்தில் அல்லது ஏதாவதொரு துறையில் பிரபலயமிக்க விடயம் அல்லது பிரபல்யமிக்கவர்கள் பேசப்படுவதுபோன்று அல்லது பெயர் கூறி எல்லோராலும் உச்சரிக்கப்படுவது போன்று கிழக்குப் பிராந்தியத்தில் கல்முனை என்ற பெயர் பிரபல்யமிக்கது. இப்பெயர் பல்வேறு தளங்களில் உச்சரிப்படுவது யதார்;த்தமானது.

ஆனால், அப்பிரபல்யமிக்க பெயர்தாங்கிய எல்லைக்குள் வாழ்பவர்கள் ஆளப்பிறந்தவர்கள் என்றும் ஏனையவர்கள் ஆளப்பட வேண்டியவர்கள் என்றும் கருதப்படுவதோ அல்லது கல்முனை என்ற பெயருக்குள் ஏனைய பிரதேசங்களின் பெயர் மறைக்கப்பட்டு விடுகிறது என்று சிந்திப்போதோ நியாயமாகாது. அது சின்னத்தனமான சிந்தனையாகும். 

கல்முனையின் அதிகாரத்தில் இருந்தவர்கள் இழைத்த சில தவறுகள்தான் தங்களது தனியான உள்ளுராட்சி மன்றக் கோரிக்கைக்குக் காரணமென்றும், நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் இல்லை என்றும் கூறப்பட்டாலும் கல்முனை என்ற பெயருக்குள் எங்கள் ஊர் மறைந்து கிடக்க முடியாது என்ற அற்ப சிந்தனை கொண்ட ஒரு சில  சாய்ந்தமருது நபர்களினால் உருவாக்கப்பட்ட பிரதேசவாதச் சிந்தனையின் ஒட்டுமொத்த வடிவமே  கடந்த காலங்களில் தொப்புல்கொடி உறவாக விளங்கும் சாய்ந்தமருது மக்களையும் கல்முனை மக்களையும் ஏட்டிக்குப் போட்டியாக வீதியில் இறங்கி பேரணி செல்லவும், ஹர்த்தால், கடையடைப்பை மேற்கொள்ளவும் வழிகோலியது என்பதை மறுக்க முடியாது.

இந்நிலையில், பிரிக்கப்படாத இலங்கைக்குள் சிறுபான்மை மக்களின் அல்லது தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்க எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றதோ, அதற்காக எவ்வாறான பொறிமுறைகள் உருவாக்கப்படுகிறதோ. அப்பொறிமுறைகளினூடாக தமது சமூகத்திற்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் எனத் தமிழ் தரப்புக்கள் ஒத்துழைத்து செயற்படுகிறதோ அவ்வாறு பிரிக்கப்படாத கல்முனைக்குள் பிரதேசங்களின் நலன்களைப் வழங்குவதற்கும் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் சகவாழ்வுக்கும் உரிய பொறிமுறைகள் உருவாக்கப்பட்டு அவை செயற்படுத்தபடுகின்றபோது கல்முனையில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைக்கு தீர்வைப் பெறலாம். சமூக உறவையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் வழுவூட்டி சகவாழ்வைக் கட்டியெழுப்பலாம்.

இவ்வாறான தீர்வுக்கான சோனைக்கு மத்தியில், சாய்ந்தமருது மக்களும் கல்முனை மக்களும் அவர்களை வழிநடத்துகின்ற பள்ளி நிருவாகங்களும் இஸ்லாத்தின் போதனையின் அடிப்படையில் ஒன்றுபட்டு ஒரு மேசையிலிருந்து பேச முன்வார்களா?  சாய்ந்தமருதூருக்கு தனியான சபை வழங்குவதோடு கல்முனையையும் முன்னர் இருந்த சபைகளுக்கான எல்லைகளோடு நான்கு சபைகளாப் பிரிக்க தமிழ் தரப்புக்கள் ஏற்றுச் செயற்படுவார்களா? இவற்றைச் சாத்தியப்படுத்துவது யார் என்ற வினாக்களுக்கும் மத்தியில்  ஓவ்வொரு ஊரும், ஒவ்வொரு சமூகம் தங்களது நிலைப்பாடுகளிலிருந்து இறங்கி வந்து ஆரோக்கியமான விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டு கல்முனையின் பிரதேச மற்றும் சமூக ஒருமைப்பாட்டைப் காயப்படுத்தாது, பாதுகாத்து பிரதேச ஒற்றுமையையும் சகவாழ்வைக் கட்டியெழுப்ப வேண்டுமென்றே சமூக உறவையும், பிரதேச ஒருமைப்பாட்டையும் சகவாழ்வை விரும்பும் கல்முனை வாழ் மக்களும்  ஏனைய பிரதேச மக்களும் விரும்புகின்றனர். 

கல்முனையின் வரலாற்றில் ஒவ்வொரு பிரதேச மக்களினதும் சமூக, பொருளாதார, அரசியல் அபிலாஷைகள் கல்முனையை ஆண்ட அதிகாரத்தரப்புக்களால் மறுக்கப்பட்டிருக்கலாம், புறக்கணிப்புச் செய்யப்பட்டிருக்காலம். அதனால் அவர்களது பிரதேசம் சமூக, பொருளாதார, அரசியலில் பின்னடைவு கண்டிருக்கக் கூடும். அவற்றை மறுப்பதற்கில்லை. இருப்பினும், அதற்காக பிரதேசங்களிடையே பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கக் கூடாது.

ஊர்வெறி, சுயநலன்கள், பிரதேசவாதம், குறுகிய மனப்பான்மை, பிரதேச மற்றும் இன அதிகார ஆதிக்கம் என்பவற்றுக்கு அப்பால், விட்டுகொடுப்பு, புரிந்துணர்வு, பிரதேச வரலாற்றுத் தூர நோக்கு  என்பவற்றுடன், சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை,  கல்முனை உப பிரதேச செயலக தரம் உயர்வு, கல்முனை மாநகரத்துக்கான எல்லைப் பிரிப்பு என்பவற்றுக்கான அரசியல் தீர்வானது கல்முனைப் பிரதேசத்தின் பிரதேசங்களுக்கிடையிலான ஒற்றுமையையும், முஸ்லிம் சகோதரத்துவதைத்தையும், தமிழ் முஸ்லிம் இனங்களுக்கிடையிலான சமூக ஒருமைப்பாட்டையும் பிளவுபடுத்தாத வகையில் அமைய வேண்டும் என்பதே நடுநிலைச் சிந்தனையளர்களின் எதிர்பார்ப்பாகும்.

-எம்.எம்.ஏ.ஸமட்

No comments:

Post a Comment