கொல்லுப்பிட்டி 'போதைப் பொருள்': கொஸ்கொட சுஜியைத் தேடும் பொலிஸ் - sonakar.com

Post Top Ad

Friday, 1 March 2019

கொல்லுப்பிட்டி 'போதைப் பொருள்': கொஸ்கொட சுஜியைத் தேடும் பொலிஸ்அண்மையில் கொல்லுப்பிட்டியில் கைப்பற்றப்பட்டிருந்த பெருந்தொகை போதைப் பொருள் விவகாரத்தில் கொஸ்கொட சுஜி தொடர்புபட்டிருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்ற நிலையில், சுஜியைக் கைது செய்ய இன்டர்போலின் உதவியை நாட அனுமதித்துள்ளது நீதிமன்றம்.கொஸ்கொட சுஜி மற்றும் நால்வரை இவ்விவகாரம் உட்பட ஏனைய குற்றச்செயல்களுக்காக பொலிசார் தேடிவருகின்றனர். மதுஷ் போன்றே சுஜியும் வெளிநாட்டில் இருப்பதாகக் கருதப்படும் நிலையில் இன்டர்போல் ஊடாக சர்வதேச பிடியாணை பிறப்பிக்க முயற்சிகள் இடம்பெறும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கொல்லுப்பிட்டி போதைப் பொருள் விவகாரத்தில் பாணந்துறையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment