பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்கள்: ஹோட்டல் உரிமையாளருக்கு அபராதம் - sonakar.com

Post Top Ad

Friday 1 March 2019

பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்கள்: ஹோட்டல் உரிமையாளருக்கு அபராதம்


ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட கொழும்பு பிரதான வீதியில் இயங்கி வரும் அறபா நகர் பிரதேசத்தில் உள்ள  உணவகம் ஒன்று சுகாதார மற்ற முறையில் நடாத்தப்பட்டு வருவதாகவும் அங்கு கலாவதியான  மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொது மக்களினால் வழங்கப்பட்ட இரகசிய தகவலை அடுத்து சந்தோகத்தின் பெயரில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினரால் நேற்று 28.02.2019 வியாழக்கிழமை  நண்பகல் அவ் உணவகம் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 


நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் கிழக்கு மாகாண பொறுப்பதிகாரி ஆர்.எப்.அன்வர்சதாத் தலைமையிலான குழுவினரே இச்சோதனையில் ஈடுபட்டனர். 

இதன் போது பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் சமைப்பதற்கும் விற்பதற்கும் ஆக அங்கு இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பொது சுகாதார வைத்திய பொறுப்பதிகாரிக்கு அறிவித்ததையடுத்து துரிதகதியில் அங்கு விஜயம் செய்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உணவகத்தை சோதனையிட்டனர். 

சோதனையின் பின்னர் மனித பாவனைக்கு உதவாத பல உணவுப் பொருட்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டது. 

சுகாதார மற்ற முறையில் உணவத்ததை நடாத்தியமை பாவனைக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்தமை போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு உணவுச்சட்டத்தின் கீழ் குறித்த உணவக உரிமையாளருக்கு எதிராக வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினமே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதுடன் கைப்பற்றப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் குறிந்த வழக்கை நேற்றைய தினமே விசாரனைக்காக எடுத்துக்கொண்டதுடன் உணவக உரிமையாளருக்கு கடும்  எச்சரிக்கையையும்  விடுத்துள்ளதாகவும் இதற்காக ரூபாய் பத்தாயிரம் தண்டப்பணம் வீதித்துள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

குறித்த உணவகம் தொடர்பில் கடந்த காலங்களில் பொது மக்களினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையாகக் கொண்டும் அதனை திடீர் பரிசோதனைகளின் மூலம் ஊர்ஜிதம் செய்யப்பட்ட பின்னர் இதுவரை ஆறு வழக்குகள் நீதிமன்றில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக கிழக்கு மாகாண பொறுப்பதிகாரி ஆர்.எப்.அன்வர் சதாத் எமக்கு தொரிவித்தார்.

-எம்.ரீ.எம்.பாரிஸ

No comments:

Post a Comment