தலைமை நீதிபதி தெரிவில் அநீதி: பைஸர் - sonakar.com

Post Top Ad

Sunday 24 February 2019

தலைமை நீதிபதி தெரிவில் அநீதி: பைஸர்


மேன் முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக, முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா அறிக்கை ஒன்றின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.



அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,  மேன் முறையீட்டு  நீதிமன்ற தலைமை  நீதிபதி தெரிவு  விடயத்தில்,  நீதிபதி நவாஸுக்கு பாகுபாடு  காட்டப்பட்டுள்ளது. இத்தகைய பாகுபாடுகளை நான் எதிர்க்கிறேன். இதற்கு எதிராகவும் நான் குரல் கொடுக்கத் தயாராக உள்ளேன்.

 நீதிபதி நவாஸ் மிகவும் தகுதியும் திறமையும் உடையவர்.  எனவே,  தலைமை நீதிபதியாக பதவியேற்கக் கூடிய வாய்ப்பு அவருக்கு அதிகமாகவே இருந்தது. ஏனெனில், அவர் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் இளைய மற்றும் மூத்த நீதிபதிகளில் இவரும் ஒருவராவார். இவர் சில சமயஙகளில் பதில் தலைமை நீதிபதியாகச்  செயற்பட்ட போதிலும்,  இனவாதத்தின் காரணமாக இவர், அவரது பதவி உயர்வை இழக்க நேரிட்டது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

-ஐ. ஏ. காதிர் கான்

No comments:

Post a Comment